BIGG BOSS 6 TAMIL : "நான் சம்பாதிக்குறேன், நீங்க யாரு கேக்குறதுக்கு".. ஃபீல் பண்ணிய ரச்சிதா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக களமிறங்கியுள்ள சீரியல் நடிகை ரச்சிதா சமீபத்தில் பேசியுள்ள விஷயம், பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

rachitha about issues between parents and daughter bb6 tamil
Advertising
>
Advertising

தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி மட்டுமில்லாமல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டு களிக்க முடியும்.

இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது. அது மட்டுமில்லாமல், சில போட்டியாளர்களுக்கு என்று பிரத்யேக ஆர்மி உருவாக்கி அவர்கள் குறித்த விஷயங்களை ரசிகர்கள் பலரும் வைரல் ஆக்கியும் வருகின்றனர்.

அதே போல, பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க் காரணமாக பல்வேறு வாக்குவாதங்கள் உள்ளிட்ட விஷயங்கள், போட்டியாளர்கள் இடையேயும் நடந்து வருகிறது. இதனால்,ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பும் அதிகமாக உள்ளது.

மேலும், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான நடிகை ரச்சிதாவும் பிக்பாஸ் 6 வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். மிகவும் அசத்தலாக பிக்பாஸ் வீட்டிற்குள் ரச்சிதா செயல்பட்டு வரும் நிலையில், இவருக்கும் ஆர்மி உருவாக்கி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், தனது சக போட்டியாளர்களிடம் ரச்சிதா பேசிய விஷயம், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. கதிரவன் மற்றும் குயின்ஸி ஆகியோர் இருக்க, அப்போது பேசும் ரச்சிதா, "அப்பா அம்மாக்கள் அனைவரும் என்ன செய்கிறார்கள் என்றால் அனைத்தையும் தங்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்து விடுகிறார்கள். பிள்ளைகளின் கல்யாணம் முடிந்த பிறகு, பெற்றோர்களுக்கு ஏதாவது தேவை என்றால், அவகிட்ட கேக்கலாமா வேணாமா என யோசித்து விட்டு கடைசியில் வேண்டாம் என்றே விட்டு விடுவார்கள்.

ஆனால், பிள்ளைகள் தானே அவர்களை பார்த்து கொள்ள வேண்டும். அதே வேளையில், சில கட்டுப்பாடுகள் காரணமாக நம்மாலும் பெற்றோர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது. அந்த கட்டம் எல்லாம் மிகவும் கடினமாக இருக்கும். நான் பணம் சம்பாதிக்கிறேன், என் அப்பா, அம்மாவுக்கு நான் கொடுப்பதை கேட்க நீ யார் என கேட்க வேண்டும் என தோன்றும். அப்படி ஒரு சூழல் யாருக்கும் வரக் கூடாது.

அதனால், என் பெற்றோர்களிடமும், 'நீங்கள் சேர்க்கும் காசு உங்களுடையது. நான் மோசமான நிலையில் போனால் கூட, என்னை நான் பார்த்துக் கொள்வேன். நீங்கள் உங்கள் பணத்தை எனக்காக செலவு செய்யக் கூடாது' என கூறி விட்டேன்" என ரச்சிதா குறிப்பிட்டுள்ளார்.

BIGG BOSS 6 TAMIL : "நான் சம்பாதிக்குறேன், நீங்க யாரு கேக்குறதுக்கு".. ஃபீல் பண்ணிய ரச்சிதா.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rachitha about issues between parents and daughter bb6 tamil

People looking for online information on BB6 Tamil, BiggBoss6 Tamil, Rachitha Mahalakshmi will find this news story useful.