தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 10 பேர் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

Also Read | "பாசம் வைக்க, நேசம் வைக்க".. அசிம், கதிர் Friendship.. லைவ் ஷோவால் மாறிய வாழ்க்கை.. "சூப்பர்ல"
இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.
அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது. இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வார எலிமினேஷனில் ஜனனியும் வெளியேறி இருந்தார். இறுதி போட்டி வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜனனி பாதியில் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது.
இதற்கடுத்து மீதமுள்ள போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த வாரம் பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக மாறி விளையாடி வருகின்றனர்.
பொதுவாக டாஸ்க் என வந்து விட்டால், பிக்பாஸ் வீட்டிற்குள் நிறைய சண்டைகள் உருவாவதை தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த வாரம் கலகலப்பாகவும், சற்று எமோஷனல் ஆகவும் செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும். போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்து கொண்டு தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும், நண்பர்கள் குறித்தும் பேசுவது போல டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.
இதில் நடிகையாக தான் ஆவதற்கு முன்பாக குடும்பத்தில் பட்ட கஷ்டங்கள் குறித்தும், தனது பெற்றோர்கள் தனக்காக போட்ட கடின உழைப்பு குறித்தும் நடிகை ரச்சிதா பேசி இருந்தது பலரையும் கண் கலங்க வைத்திருந்த்து. அதே போல, தற்போது மற்றொரு நிகழ்வில் தனது வீட்டில் உள்ளவர்களுக்கு கடிதம் எழுதி அதை அவர்கள் படிப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதில் பல போட்டியாளர்கள் அந்த கடிதத்தை படிக்கும் போது, கண்ணீர் விட்டு கதறவும் செய்கின்றனர். அப்படி ஒரு சூழலில் தனது தாய்க்காக ரச்சிதா எழுதிய கடிதம் தொடர்பான விஷயம், தற்போது அங்கிருந்த போட்டியாளர்கள் உட்பட பலரையும் மனம் நொறுங்க வைத்துள்ளது.
கடிதத்தை படிக்கும் ரச்சிதா, "அந்த கடவுள் கிட்ட கேட்டுக்கிறது ஒண்ணே ஒண்ணு தான். எனக்கு இதுக்கப்புறம் என் வாழ்க்கையில் என்ன நடக்கும்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. குழந்தையோட அமைப்பு இருக்கான்னும் எனக்கு தெரியாது. என் அம்மா தான் எனக்கு குழந்தை. அந்த கடவுள் அந்த குழந்தையை என்கூட கடைசி வரைக்கும் கொடுக்கணும். அந்த குழந்தையை நல்லபடியா நான் பாத்துக்கணும். அது மட்டும் நான் கேட்டுக்குறேன். இதுக்கப்புறம் எனக்கு நீ, உனக்கு நான்னு வாழுறதுக்கு ரெடியா இருக்கேன் அம்மா" என தாரை தாரையாக கண்ணீர் வடித்தபடி ரச்சிதா பேசுவதை கேட்டு, ஷிவினும் அவரை கட்டியணைத்த படி கண்ணீர் விடுகிறார்.
இந்த சீசனின் மிகவும் எமோஷனல் கலந்த எபிசோடுகள் இந்த வாரம் இருக்கும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | "கழுத்த நெரிச்சு சாக சொன்னாங்க".. நடிகையாகும் முன் ரச்சிதா இவ்ளோ கஷ்டப்பட்டாங்களா..??