ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read | "உத்தமவில்லனுக்கு பதில் பாபநாசம் தான் பண்ண வேண்டியது"..- மனம் திறந்த லிங்குசாமி
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.
இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.
இதில் Ticket To Finale சுற்றில் இரண்டாவது டாஸ்க்காக, Debate டாஸ்க் அரங்கேறி இருந்தது. இதில் இரண்டு போட்டியாளர்கள் மாறி மாறி விவாதம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் முன்னே இருக்கும் பல்புகளில் அதிகம் யாருக்கு எரிகிறதோ அவரே வெற்றியாளர் என்றும் பிக் பாஸ் தெரிவிக்கிறார். இதில் பல போட்டியாளர்கள் இடையே நடந்த விவாதங்கள் பெரிய அளவில் விறுவிறுப்பை எகிற வைத்திருந்தது.
அதிலும் ரச்சிதா மற்றும் அசிம் ஆகியோர் மாறி மாறி தங்களின் கருத்துக்களை முன் வைத்திருந்த விஷயமும் ஃபயர் மோடில் இருந்தது. சற்று அமைதியாகவே சிரித்த முகத்துடன் பிக் பாஸ் வீட்டில் வலம் வந்த ரச்சிதா, இந்த விவாத டாஸ்க்கில் கொஞ்சம் ஆவேசமாகவும் செயல்பட்டிருந்தார்.
அப்படி ஒரு சூழலில், தற்போது குக்கிங் டீமில் இருக்கும் ரச்சிதா, வெளியே உட்கார்ந்திருக்கும் அனைத்து போட்டியாளர்களிடமும் காலை உணவு வேண்டுமா என்பது பற்றியும், சமைக்க போவது பற்றியும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது, அமுதவாணன் உள்ளிட்டோர் ஜாலியாவும் சில கருத்துக்களை குறிப்பிட, அப்படியே Freeze ஆகி நிற்பது போல நிற்கிறார் ரச்சிதா.
இதனை பார்த்து விக்ரமன் மற்றும் ADK உள்ளிட்டோர் Freeze டாஸ்க்கில் நிற்கிறார்களா என்றும் கேட்கிறார்கள். காலை உணவு பற்றி சிறிது நேரம் அனைத்து போட்டியாளர்களும் பேசிக் கொண்டிருக்க, ரச்சிதா முகமும் சற்று மாறி இருந்தது. இறுதியில், யார் யாருக்கு காலை உணவு வேண்டுமென லிஸ்ட் எடுத்து விட்டு உள்ளே செல்கிறார் ரச்சிதா.
அவர் உள்ளே போன பிறகு, சக போட்டியாளர்களிடம் பேசும் ADK, "பாத்தியா, நாள் நெருங்க நெருங்க எரிமலை எப்படி பொறுக்கும்" என ரச்சிதா ஆவேசமாக செயல்பட்டதையும் வேடிக்கையாக குறிப்பிடுகிறார்.
Also Read | மகள் அனோஷ்காவின் பிறந்தநாள்.. வாழ்த்தி ஷாலினி அஜித்குமார் பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்!