பட ரிலீஸ்க்கு போட்டோ ஷூட்.. ரசிகர்களை கவர்ந்த பிரபல முன்னணி இளம் நடிகையின் வைரல் ஃ போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதிய படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகை ராஷி கண்ணா தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | கேரளாவில் மறு வீட்டுக்கு வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்..‌ இணையத்தில் Trend ஆகும் Cute Video!

ராஷி கண்ணா தேன்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

இவர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ‘மெட்ராஸ் கஃபே’ மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினாலும், இப்போது அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.

கடைசியாக சன் டிவியில் நேரடி தொலைக்காட்சி வெளியீடு செய்யப்பட்ட விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்திலும், அக்டோபர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் பிரித்விராஜ் சுகுமாரனின் 'பிரம்மம்' மலையாள படத்திலும், அக்டோபர் 14 ஆம் தேதி இவர் நடிப்பில்  திரையரங்குகளில் வெளியான 'அரண்மனை 3 ' படத்திலும் நடித்தார்.

ராஷி கண்ணா தற்போது தனுஷ் நடிப்பில் 'திருச்சிற்றம்பலம்', கார்த்தி நடிப்பில் 'சர்தார் ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷி கண்ணா, கோபிசந்த் உடன் இணைந்து நடித்துள்ள "பக்கா கமர்ஷியல்" படத்தின் ரிலீஸை ஒட்டி போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார். கருப்பு நிற சேலையில் ராஷி கண்ணா தோன்றுகிறார். 

இரண்டு நாட்களுக்கு முன் கருப்பு நிற மாடர்ன் உடையில் ராஸி கண்ணா போட்டோ ஷூட் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

பக்கா கமர்ஷியல் படம் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகிறது. நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Also Read | 1.5 கோடிக்கு ஒரே நேரத்தில் 8 சொகுசு கார்கள் வாங்கிய பவன் கல்யாண்.. இது தான் காரணமா?

Raashi Kanna New Photoshoot for Pakka Commercial Movie

People looking for online information on Pakka Commercial Movie, Raashi kanna, Raashi Kanna Latest Photoshoot will find this news story useful.