தமிழ்த் திரைத்துறையினை போலவே பாலிவுட்டிலும் அடுத்தடுத்து கலைஞர்களின் மரண சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாலிவுட்டின் 80கள் முதலே புகழ்பெற்ற இசையமைப்பாளராக விளங்கிய ராம் லக்ஷ்மன் மறைவு செய்தி பலரையும் உருக்கமடையச் செய்துள்ளது.
1942ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பிறந்த இசையமைப்பாளர் லக்ஷ்மனின் இயற்பெயர் விஜய் பாட்டீல். ஆனால், சினிமா உலகத்தில் இரட்டை இசையமைப்பாளர்களாக ராம் மற்றும் லக்ஷ்மன் இருவரும் கலக்கினார். இவரது நண்பர் ராம்(சுரேந்திரா) என்பவர் 1976ம் ஆண்டு மறைந்துவிட்டார். எனினும் தொடர்ந்து ராம்லக்ஷ்மன் எனும் பெயரிலேயே இவர் படங்களுக்கு இசையமைத்து வந்தார்.
1975ம் ஆண்டு வெளியான பாண்டு அவல்தார் எனும் மராத்தி படத்திற்கு இசையமைத்து திரைத்துறையில் அறிமுகமான லக்ஷ்மன், தொடர்ந்து இந்தி, மராத்தி மற்றும் போஜ்புரி மொழிகளில் வெளியான சுமார் 75 படங்களுக்கு ராம்லக்ஷ்மனாக இசையமைத்துள்ளார். இவற்றுள் பெரும்பாலும் எஸ்.பி.பியை பாடவைப்பதை வழக்கமாகவும் கொண்டவர் லக்ஷ்மன் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினர் இந்த துயரில் இருந்து மீண்டு வரவும் பிரார்த்திப்பதாகவும் சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மாதுரி தீக்ஷித், லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோரும் ராம் லக்ஷ்மன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.