இம்மாதம் திரைக்கு வரும் ராய் லக்‌ஷ்மி படம்! ரிலீஸ் தேதியுடன் தனுஷ் வெளியிட்ட டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராய் லக்‌ஷ்மி, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகவுள்ளது.

லாக்டவுனால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் திரைத்துறையில் எடுத்து முடிக்கப்பட்ட பல படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், பல படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

தற்போது திரையரங்குகள் திறக்கப்படும் அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்கள் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் ராய் லக்‌ஷ்மி நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. முன்னதாக வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லக்‌ஷ்மி, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டிரெய்லரை தனுஷ்  வெளியிட்டார்.

இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வினோ வெங்கடேஷ், இந்த படத்தை ஹாரர் த்ரில்லர் ரக படமாக இயக்கியுள்ளார்.

எஸ்.சுப்பையா தயாரிக்கும் இப்படத்துக்கு அஷ்வமித்ரா இசையமைக்கிறார். ராமி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். வரும் செப்டம்பர் 24ஆம் தேதி இந்த படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Also Read: அட்ரா சக்க.. BiggBoss வீட்ல "மைனா" சூஸனா? ..உண்மை என்ன? அவரே பகிர்ந்த Viral பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Raai Laxmi Cinderella release date dhanush release trailer

People looking for online information on Cinderella, Raai Laxmi will find this news story useful.