“ஹீரோக்களை திட்டுவது தவறு”…. “விஜயகாந்த் போல யாரும் இல்லை”… ஆர் வி உதயகுமார் அதிரடி பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிட்தி படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ஆர் வி உதயகுமரின் பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘லெஜெண்ட்’ படத்தின் first single…. வெளியான தெறி அப்டேட்!

சிட்தி இசை வெளியீடு…

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக  திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில்  தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம்  திரில்லராக  உருவாகியிருக்கும்  படம் 'சிட்தி' ( SIDDY ).இந்த படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடந்தது. அதில் தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர் ஆர் வி உதயகுமார் மற்றும் பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். இதில் இயக்குனர் ஆர் வி உதயகுமாரின் பேச்சு கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

ஆர் வி உதயகுமார் பேச்சு…

படம் என்பது வேறு, குணாதிசியம் வேறு. ஒரு மென்மையானவன், வன்மையானவனாகிறான் என்பதை படமாக எடுக்கலாம். அது தான் இந்த படத்திலும் காட்டபட்டுள்ளது. அப்பாவி எப்படி சிக்கலுக்குள் மாட்டிகொள்கிறான் என்பது தான் கதை. ஹீரோக்களை ராஜன் அதிகமாக திட்டுகிறீர்கள், அது தவறு. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் போன்று சாப்பாடு போட்டவர் யாரும் இல்லை. என்னை கூட்டி போய் சாப்பாடு போட்டவர் விஜயகாந்த். யாரும் பசியுடன் இருப்பது பிடிக்காமல் சாப்பாட்டு போட்டவர் விஜயகாந்த். கேட்காமலயே உதவியவர் அஜித் குமார். தோல்வி படத்திற்கு பிறகு அதே நிறுவனத்திற்கு படம் செய்து கொடுப்பவர். வாழ்ந்து பார்த்தால் தான் இயக்குனராக முடியும். சில டூபாக்கூர் இயக்குனர்கள் உள்ளனர்.

சினிமாவை பிஸ்னஸ் ஆக்கிவிட்டீர்கள்…

நமக்கு லாரன்ஸ், விஜய், சூர்யா என பலர் உதவினர். அவர்களை வாழ்த்த வேண்டும். இப்பொழுது சினிமாவை பிசினஸ் ஆக்கி விட்டீர்கள். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களை இயக்குனராக்காமல், பணம் கேட்பவருக்கு கொடுத்து கெடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இந்த படம் தமிழ் தயாரிப்பாளர், மலையாள குழு உடன் படம் எடுத்துள்ளார். முன்னர் எல்லா மொழியும் சென்னையில் தான் எடுக்கபட்டது.

பான் இந்தியா படங்கள்…

இப்பொழுது தான் பான் இந்தியா என்ற வார்த்தை உள்ளது. ஆனால் முன்னரே அப்படி தான் எடுக்க பட்டது. அதை மாற்றியவர்கள், வியாபாரிகள். இசையமைப்பாளர் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநரும் தான் கூற வேண்டும். இசையமைப்பாளர் பாடல்களை சிறப்பாக உருவாக்கியுள்ளார் வாழ்த்துக்கள். சமீபத்தில் நான் பார்த்த டிரெய்லர்களில் என்னை விஷுவலாக அசத்தியது இந்தப்படம் தான். படத்தில் எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள். ஹீரோயின் பெயரில் என் பெயரும் உள்ளது வாழ்த்துக்கள் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அந்த தலைப்பை மாற்ற சொன்னார்கள்…. ஆடியோ ரிலீஸில் மனம் திறந்த ’வாய்தா’ இயக்குனர்!

R V udhayakumar speech about abusing Tamil heroes

People looking for online information on R V udhayakumar, R V udhayakumar latest speech, Tamil heroes will find this news story useful.