ஐபிஎல் போட்டிக்கு நடுவே… ’வீட்ல விசேஷம்’ முக்கிய அப்டேட்… R J பாலாஜி கொடுத்த சர்ப்ரைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் அடுத்து உருவாகி வரும் வீட்ல விஷேசம் படத்தின் டிரைலர் வெளியீடு பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

R J Balaji veetla vishesham movie trailer IPL match update
Advertising
>
Advertising

Also Read | சமந்தா & விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘குஷி’… படப்பிடிப்பில் விபத்தா?... படக்குழு அளித்த பதில்!

பண்பலை தொகுப்பாளராக வேலை செய்துவந்த ஆர் ஜே பாலாஜி, தனது நகைச்சுவையான மற்றும் தனித்துவமான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்தவர். சினிமா விமர்சனங்களை செய்துவந்த அதன் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தால் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதலில் நகைச்சுவை வேடங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அவருக்கு நானும் ரௌடிதான் படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எல் கே ஜி என்ற அரசியல் பகடி படத்தில் கதை, திரைக்கதையில் பங்களிப்பு செய்து  கதாநாயகனாகவும் நடித்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கி இருந்தார்.

R J Balaji veetla vishesham movie trailer IPL match update

மூக்குத்தி அம்மன்…

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியால் மீண்டும் ஐசரி கணேஷோடு இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை சரவணன் என்பவரோடு இணைந்து இயக்கினார். மூக்குத்தி அம்மன் படத்தில்  அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்க, மத்திய தரவர்க்க குடும்பஸ்தனாக ஆர் ஜே பாலாஜி நடித்திருந்தார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அம்மன் படமாக அமைந்ததால்  மூக்குத்தி அம்மனுக்கு குடும்ப திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைததது.

வீட்ல விசேஷம்…

இதையடுத்து ஆர் ஜே பாலாஜி இப்போது போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆகும். தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கியும் உள்ளார் பாலாஜி. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது.

டிரைலர் எப்போது…

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் பற்றிய தகவலை தற்போது R J பாலாஜி பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “எனது முந்தைய படங்களான LKG மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகியவற்றின் டிரைலர் ஐபிஎல் போட்டிகளின் போது ரிலீஸானது. அதுபோலவே இப்போது வீட்ல விசேஷம் திரைப்படத்தின் டிரைலர் நாளை (மே 25) நடக்கவுள்ள பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது வெளியாகும்.” என அறிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த டிரைலர் வெளியீட்டின் போது நடிகர்கள் சத்யராஜ் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோரும் இருப்பார்கள் என்று அறிவித்துள்ளார்.

Also Read | நடிகர் T ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை… நடிகர் சிம்பு வெளியிட்ட அறிக்கை

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

R J Balaji veetla vishesham movie trailer IPL match update

People looking for online information on R J Balaji, Veetla vishesham movie, Veetla vishesham movie trailer will find this news story useful.