"அவரே வேணாம்னுட்டாரு.. ஏன் ரெய்னாவை சின்ன தலனு சொல்றீங்க.." CSK மேட்சில் R J பாலாஜி அடித்த கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: 15-வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் மும்பை மற்றும் புனேயில் தொடங்கியது.

R J Balaji Commentary about Suresh Raina goes viral
Advertising
>
Advertising

இன்றைய போட்டியில் சென்னை - லக்னோ அணிகள் மோதுகின்றன. மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் சுரேஷ் ரெய்னா தமிழ் கமெண்ட்ரிக்கு வருகை தந்தார். கிரிக்கெட் வீரர் பத்ரி நாத், கிரிக்கெட் ஆய்வாளர் ஆர் கே உடன் கமெண்ட்ரி செய்தார். தனக்கு பிடித்த உணவுகள் குறித்தும், தனது CSK அணி உடனான நினைவுகள் குறித்தும் பகிர்ந்தார். 

R J Balaji Commentary about Suresh Raina goes viral

பஞ்சாப் அணிக்கு எதிரான பிரசித்தி பெற்ற 2010 ஆம் ஆண்டு தர்மசாலா போட்டி குறித்து சிறப்பான நினைவுகளை பகிர்ந்தார் . இர்பான் பதானின் கடைசி ஓவரை தோனி எதிர்கொண்ட விதம் குறித்தும் பேசினார். இதற்கு முன்பாக போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் தமிழ் கமெண்ட்ரிக்கு ரெய்னா வருவது குறித்து அறிவிக்கப்பட்டது.  சின்ன தல ரெய்னா வரார் என அறிவித்த போது, கமெண்ட்ரியில் இருந்த RJ பாலாஜி அடித்த கமெண்ட் செம வைரலானது.

கமெண்ட்ரியில் RJ பாலாஜி கூறியது, "பெரிய தலயே (நடிகர் அஜித்குமார்) என்னய தல-னு கூப்ட வேணாம்னு சொல்லிட்டாரு .. அப்றம் ஏன் சின்ன தலனுலாம் சொல்லிட்டு.."  என கமெண்ட் அடித்தார். இந்த கமெண்ட் செம வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தன்னை தல என அழைக்க வேண்டாம் என சமீபத்தில் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. சென்னை அணியின் ரசிகரான இவரின் காமெடியான வர்ணனைக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.  இவர் கடைசியாக இவர் முக்கிய வேடத்தில் நடித்த எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது 'வீட்ல விசேஷம்' படத்தின் வெளியீட்டுக்கு RJ பாலாஜி காத்திருக்கிறார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

R J Balaji Commentary about Suresh Raina goes viral

People looking for online information on Ajith Kumar, CSK, CSK v LSG, IPL, IPL 2022, LUCKNOW, RJ Balaji, Suresh Raina, Thala will find this news story useful.