"கதிரும் நானும் LOVE பண்ணோமா?".. "எல்லாம் ஷிவினுக்காக தானா.?".. உடைக்கும் குயின்சி.. EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், 50 நாட்களைக் கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "மிஸ் பண்றேன்" 😍.. மும்பையின் பிரபல உணவகத்தில் இருந்து விக்னேஷ் சிவன்!

இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் தான்.

அதிலும் சில டாஸ்க்குகளில் வெற்றி பெறுவதற்காக போட்டியாளர்கள் ஆவேசமாகவும் செயல்படும் சமயத்தில் மாறி மாறி சிலருக்கு இடையே சண்டையும் வெடித்திருந்தது.

தற்போது சினிமா கதாபாத்திரங்களாக மாறி போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் ஆடி வருகின்றனர். இந்த டாஸ்க் சுற்று, சற்று கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு முன்பு நடந்த ஏலியன் மற்றும் பழங்குடி இன மக்கள் டாஸ்க்கில் நிறைய சண்டைகள் வெடித்திருந்தது. அணிக்குள் கூட சில குழப்பங்கள் ஏற்பட்டு சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது.

அடுத்தடுத்து பல்வேறு விவாதங்களும் நடந்து வரும் சூழலில், பார்வையாளர்களும் மிகுந்த ஆவலுடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இதனிடையே, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சி வெளியேறி இருந்தார். இந்த நிலையில், தற்போது Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை குயின்சி அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த பல விஷயங்கள் மற்றும் போட்டியாளர்கள் குறித்து குயின்சி பகிர்ர்த்து கொண்டுள்ளார்.

முன்னதாக, பிக்பாஸ் வீட்டில் கதிரவன் மற்றும் குயின்சி ஆகியோர் காதலித்து வருவதாக ஒரு தகவல் பரவி வந்தது. ரசிகர்கள் பலரும் கூட இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தும் வந்தனர். அப்படி ஒரு சூழலில், இது குறித்து தனது விளக்கத்தையும் குயின்சி தற்போது அளித்துள்ளார்.

"என்னோடதும் கதிரோடதும் லவ் இல்ல அது Prank. அத சொல்லணும், எல்லாருக்கும் தெரியப்படுத்தணும், யாரும் தப்பா நினைச்சுக்க கூடாதுன்னு நூறு டைம் சொல்லி இருப்பேன். அது வந்து சிவின் தான். என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் அவ. என்னோட ஃபேவரைட் ஆன போட்டியாளரும் கூட. ஒரு டாஸ்க்ல எனக்கு கலகம் பண்ணா பாருங்க, எங்க இருந்து இப்படி யோசிக்கிறானு தோணும். அதுக்காகவே நான் சொன்னேன் நீ இங்க எல்லாரையும் கலகம் பண்றியா நான் மூட்டுகிறேனடி உனக்கு கலகம், அப்படின்னு தான் அதை நாங்க ட்ரை பண்ணோம். அதை நாமினேஷன் வரை ஆனா கொண்டு வந்துட்டாங்க. நாங்க அதுக்கப்புறம் பேசாம இருந்தோம். பிக் பாஸ் வீட்ல இருக்குற எல்லாருக்கும் தெரியும். தெரிஞ்சும் அவங்க அப்படி பண்ணாங்க" என குயின்சி தெரிவித்துள்ளார்.

Also Read | "ஒரு தப்பு கண்ணுக்கு தெரியுது".. சைலண்டா கணக்கு போட்ட விக்ரமன்.. ஒரே லைன்ல Thug life பண்ண ராம் 😂!

"கதிரும் நானும் LOVE பண்ணோமா?".. "எல்லாம் ஷிவினுக்காக தானா.?".. உடைக்கும் குயின்சி.. EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Queency about kathir and shivin inside bigg boss house exclusive

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kathir, Queency, Shivin, Vijay Television, Vijay tv will find this news story useful.