அசீம்கிட்ட இருக்குற பிரச்சனை, TITLE WINNER வாய்ப்பு யாருக்கு?.. குயின்சி ஷேரிங்ஸ்.. ஒருவேளை இருக்குமோ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், 50 நாட்களைக் கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "கதிரும் நானும் Love பண்ணோமா?".. "எல்லாம் ஷிவினுக்காக தானா.?".. உடைக்கும் குயின்சி.. Exclusive

இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் தான்.

அதிலும் சில டாஸ்க்குகளில் வெற்றி பெறுவதற்காக போட்டியாளர்கள் ஆவேசமாகவும் செயல்படும் சமயத்தில் மாறி மாறி சிலருக்கு இடையே சண்டையும் வெடித்திருந்தது.

தற்போது சினிமா கதாபாத்திரங்களாக மாறி போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் ஆடி வருகின்றனர். இந்த டாஸ்க் சுற்று, சற்று கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு முன்பு நடந்த ஏலியன் மற்றும் பழங்குடி இன மக்கள் டாஸ்க்கில் நிறைய சண்டைகள் வெடித்திருந்தது. அணிக்குள் கூட சில குழப்பங்கள் ஏற்பட்டு சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது.

அடுத்தடுத்து பல்வேறு விவாதங்களும் நடந்து வரும் சூழலில், பார்வையாளர்களும் மிகுந்த ஆவலுடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இதனிடையே, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சி வெளியேறி இருந்தார். இந்த நிலையில், தற்போது Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை குயின்சி அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த பல விஷயங்கள் மற்றும் போட்டியாளர்கள் குறித்து குயின்சி பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜனனியுடன் நடந்த சண்டை குறித்தும், அசல் மாறும் நிவாஷினி ஆகியோர் குறித்தும், விக்ரமன், ஷிவின், அசீம், அமுதவாணன் உள்ளிட்ட போட்டியாளர்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவலை குயின்சி பகிர்ந்துள்ளார். அதே போல, பிக்பாஸ் வீட்டில் தனது தந்தை ஸ்தானத்தில் இருந்த ராபர்ட் மாஸ்டரை காதல் பிசாசு என்றும் குறிப்பிட்ட குயின்சி, பொண்ணுக்கு லவ் எதுவும் இல்ல, அப்பாவுக்கு பிக்பாஸ் வீட்டுல லவ் இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிக்பாஸ் சீசனில் வெற்றி பெறும் நபர்கள் யார் என்பது குறித்தும் குயின்சி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிக்பாஸ் போட்டியாளர் அசீம் குறித்து பேசிய குயின்சி, "அவரு பத்தி நாம யோசிச்சு பாத்தா, அவர் சிறந்த போட்டியாளர் தான். அவரு சொல்ற விதம் தான் பிரச்சனை" என குயின்சி தெரிவித்தார். அதே போல, விக்ரமன் பற்றி பேசிய குயின்சி, "நான் வெளியே வரும் போது அவருகிட்ட, 'நீதி, நேர்மை, நியாமம் இப்படியே இருங்கன்னு' சொல்லிட்டு வந்தேன். ஏனென்றால், அவர் அது எல்லாம் ரொம்ப பார்ப்பாருல்ல. அவரு அப்படியே விளையாடுனாருன்னா அடுத்த கட்டத்துக்கு போவாரு" என குயின்சி தெரிவித்தார்.

அதே போல, இந்த முறை பிக்பாஸ் சீசனில் டைட்டில் வின்னராக யார் வர வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த குயின்சி, ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய இரண்டு பேரின் பெயர்களை தெரிவித்துள்ளார்.

Also Read | "இம்சை யாரு?.. கொளுத்தி போடுறது இவரு தான்!!".. Open -ஆ சொன்ன குயின்சி.. .. Bigg Boss 6 Tamil

அசீம்கிட்ட இருக்குற பிரச்சனை, TITLE WINNER வாய்ப்பு யாருக்கு?.. குயின்சி ஷேரிங்ஸ்.. ஒருவேளை இருக்குமோ? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Queency about azeem and title winner names exclusive

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Queency, Queency about azeem, Vijay Television, Vijay tv will find this news story useful.