ஹாலிவுட் நடிகைக்கு கொரோனா பாதிப்பாம்... தொடரும் சோகம்... ''இத சீரியஸா எடுத்துக்கோங்க''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா உலக அளவில் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு வரை, பள்ளிகளுக்கு வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் திரையரங்குகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தனக்கும் தனது மனைவி ரீட்டாவிற்கும் கொரோனா பாதித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்தார். தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து ஹாலிவுட் நடிகை Olga Kurylenko தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ''கொரோனா இருப்பது உறுதியானதும் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளேன். கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தேன். காய்ச்சல் மற்றும் சோர்வு எனது அறிகுறியாக இருந்தது. உங்களை கவனித்துக்கொள்ளுங்கள். இதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை Olga Kurylenko கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான 'குவாண்டம் ஆஃப் சோலஸ்' (Quantum of Solace)  படத்திலும், 2013 ஆம் ஆண்டு வெளியான சயின்ஸ் பிக்சன்  படமான Oblivion படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது | Quantum of Solace fame actress Olga Kurylenko tests positive for Corona Virus

People looking for online information on Corona Virus, Covid-19, Hollywood, Olga Kurylenko will find this news story useful.