இந்தியாவுலயே முதல்முறை சென்னை AIRPORT-ல தியேட்டரா.. ஒரே டைம்ல இவ்வளவு பேர் படம் பாக்கலாமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் முதல் முறையாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திரையரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "GOOD BYE".. லண்டனில் இருந்து விக்னேஷ் சிவன் பகிர்ந்த லேட்டஸ்ட் பதிவு.. வைரலாகும் புகைப்படம்!

PVR சினிமாஸ் நிறுவனம், ஏரோஹப் மல்டிபிளக்ஸ் என்ற பெயரில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திரையரங்குகளை தொடங்கியுள்ளது. ஒரு விமான நிலைய வளாகத்தில் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மல்டிபிளக்ஸ் இதுவாகும்.

PVR இந்தியாவில் உள்ள முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும், 1997 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தற்போது இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள 78 நகரங்களில் 182 திரையரங்குகளில் மொத்தம் 908 திரைகளுடன் இயங்குகிறது.

Images are subject to © copyright to their respective owners.

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலைய வளாகத்திற்குள் அமைந்துள்ள இந்த மல்டிபிளக்ஸ் ஐந்து திரைகளுடன் மொத்தம் 1,155 பேர் அமர்ந்து படம் பார்க்கும் வசதி கொண்டது. திரை Audi 1 - 182 இருக்கைகள் கொண்டது. திரை Audi 2 - 302 இருக்கைகள் கொண்டது. திரை Audi 3 - 221 இருக்கைகள் கொண்டது.
திரை Audi 4 - 244 இருக்கைகள் கொண்டது. திரை Audi 5 - 206 இருக்கைகள் கொண்டது.

Images are subject to © copyright to their respective owners.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகளும், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களில் குடியிருப்போர்களுக்கும் இந்த திரையரங்கம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரில்  2K RGB+ லேசர் புரொஜெக்டர்கள், Real D 3D ஸ்டீரியோஸ்கோபிக் ப்ரொஜெக்ஷன் மற்றும் Dolby Atmos ஆடியோ உள்ளிட்ட நவீன  திரையிடல் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த திரையரங்கம் சென்னை விமான நிலையத்தில் உள்ள Multi Level Car Parking (MLCP) -ல் செயல்பட்டு வருகிறது.

Also Read | தளபதி 67 படத்தின் மிரட்டும் போஸ்டர்.. டிசைன் பண்ணது இவரா..! மனுசன் கையிலேயே வரஞ்சுருக்காரு!

PVR Cinemas Opened India first multiplex theatre aerohub

People looking for online information on India first multiplex theatre, PVR Cinemas will find this news story useful.