“நான் DATING-ல இல்ல.. குங்குமம் SHOOT-க்காக.. PREGNANT-ஆ?”.. SERIAL-ஐ விட்டு விலகினக்கு.. கடுப்பான நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ZEE Tamil: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில், நடிகை தேவயானி, நடிகர் அபிஷேக் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Puthu Puthu Arthangal

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள் இந்த சீரியலில் நடிகை தேவயானி மற்றும் நடிகர் அபிஷேக் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்

தேவயானி, அபிஷேக்

இந்த சீரியலில் தேவயானியின் மகன் சந்தோஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர். கணவரை இழந்த தேவயானி, அவருடைய மகன் சந்தோஷ், மருமகள் பவித்ரா, தேவயானியின் மாமனார் உள்ளிட்டோர் ஒரு குடும்பமாக வசித்து வருகின்றனர். இதில் தேவயானி லட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அபிஷேக் ஹரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அபிஷேக்- தேவயானி திருமணம் 

இதனிடையே அபிஷேக் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் தேவயானியின் கழுத்தில் தாலிகட்டிவிட, அது தேவயானியின் குடும்பத்தில் பெரிய பிரச்சனையை உண்டு பண்ணியது. குறிப்பாக அம்மா தேவயானியிடம் சந்தோஷ் பேசுவதையே நிறுத்திக் கொண்டார். தேவயானியின் மாமனாரும் தேவயானியை வெறுத்துவிட, ஆனாலும் தன் மகன் சந்தோஷ் குறித்த அக்கறை தேவயானிக்கு இருந்து வந்தது.

சந்தோஷ்க்கு புது பிரச்சனை

மகன் சந்தோஷ் வேலை பார்க்கும் ஆபீஸிலேயே டீக்கடை வைத்திருக்கும் தேவயானி, மகனிடம் அடிக்கடி நெருங்கிப் பேசும் ஆதிரா எனும் ஆபீஸ் தோழியை அடிக்கட்டி எச்சரித்துள்ளார். ஆனாலும் ஆதிரா ஒரு திட்டத்துடன் தன் கர்ப்பத்துக்கு சந்தோஷ் தான் காரணம் என சொல்லி அவனுடன் நெருங்கிப் பழக, சந்தோஷ் வசமாக சிக்கிக் கொண்டார்.

சாயா சிங் நடிப்பில் புதிய மெகா சீரியல்! பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு.. TRP எகிறப் போகுது!

ஆதிராவின் சூழ்ச்சி 

இந்நிலையில் ஆதிராவின் உறவினர் தம்பதியை போன்று அவருடன் கூட்டாக இருக்கும் ஒரு தம்பதி சந்தோஷை பிளாக்மெயில் செய்யத் தொடங்கிவிட்டனர். இதை அறிந்த சந்தோஷ், தேவயானியை தேடிவந்து என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா,  நீங்கள் சொன்னதெல்லாம் அப்போது எனக்கு புரியவில்லை. இப்போது புரிகிறது என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா என சொல்லி கதறி அழுதுள்ளார்.

அம்மாவிடம் சரணடைந்த சந்தோஷ் 

மேலும் தன்னை இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றுமாறும் அம்மா தேவயானியிடம் சந்தோஷ் மன்றாடி வருகிறார். இதனிடையே மகன் சந்தோஷ் மீது தவறு இருக்காது என்று ஏற்கனவே தேவயானிக்கு நம்பிக்கை வார்த்தைகளை அபிஷேக் (ஹரி சார்) கூறிவந்தார். இந்த சீரியல் இப்படி அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்களை நோக்கி நகர்கிறது.

மிகப்பெரிய விலைக்கு விற்ற இந்தி டப்பிங் உரிமை..பாலிவுட்டில் சாதனை படைத்த லிங்குசாமி படம்!

ஆதிரா கேரக்டர் அதிரடி மாற்றம் 

இந்நிலையில் தான் இந்த சீரியலில், ஆதிராவாக நடித்துவந்த நீது மாற்றப்பட்டு வேறொரு நடிகை அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீது மாற்றப்பட்டதற்கு அவர் Dating-ல் இருப்பது தான் காரணம், அவருக்கு திருமணம் ஆகிவிட்டது, அவருக்க்கு குழந்தை இருக்கிறது, அவர் ஒரு காட்சியில் குங்குமம் வைத்திருந்தார் என்றெல்லாம் வதந்திகளை சிலர் கூறிவருகின்றனர்.

வதந்திகளால் நடிகை நீது ஆவேசம் 

இவற்றை மறுத்து, இவற்றுக்கு அதிரடியாகவும் ஆவேசமாகவும் பதில் கூறியுள்ள நடிகை நீது, “நான் சீரியலில் இருந்து விலகியிருக்கிறேன் என்றால் அதற்கு காரணங்கள் இருக்கும். ஆனால் நான் Dating-ல் இல்லை, எனக்கு திருமணம் ஆகவில்லை, நான் குங்குமம் வைத்திருந்தது ஷூட்டிங்கிற்காக, ஏதோ ஒரு ஷூட்டிங்கில் குழந்தையை கையில் வைத்திருந்தேன், உங்கள் வதந்திகளை நிறுத்துங்கள்!” என கூறி கொந்தளித்துள்ளார்.

“நான் DATING-ல இல்ல.. குங்குமம் SHOOT-க்காக.. PREGNANT-ஆ?”.. SERIAL-ஐ விட்டு விலகினக்கு.. கடுப்பான நடிகை! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Puthu Puthu Arthangal actress neethu replaced angry answer to rumors

People looking for online information on Abhishekh, Devyani, Puthu Puthu Arthangal, Puthu Puthu Arthangal Athiraa, Puthu Puthu Arthangal Neethu will find this news story useful.