PUSHPA: THE RULE - அல்லூ அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2-ஆம் பாகம்.. தெறி அப்டேட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றான புஷ்பா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியானது.

Advertising
>
Advertising

Also Read | போடு.. திருவிதாங்கூர் மகாராணியாக பூனம் பஜ்வா.. ‘பத்தொன்பதாம் நூட்டாண்டு’ டிரெய்லர்.

கடந்த டிசம்பர் 17 -ஆம் தேதி கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. 'புஷ்பா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் நடித்தனர். இந்த படத்தை சுகுமார் இயக்கினார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைத்தார்.

படத்தில் மற்றுமொரு மிரளவைக்கும் கேரக்டரில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார். அல்லு அர்ஜூனின் சினிமா பயணத்தில் இது வரை அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட புஷ்பா திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படத்தின் முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இறுதியாக 300 கோடி ரூபாய் இந்த படம் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா: தி ரூல் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் அடுத்த பாகமான  புஷ்பா: தி ரூல் படத்தின் பணிகள் நாளை ஆகஸ்டு 22-ஆம் தேதி பூஜையுடன் தொடங்குகிறது. மேலும், இப்படம் தொடர்பான மற்றைய விபரங்கள் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.

Also Read | விக்ரம் நடிப்பில் ஆகஸ்டு 31-ல் ரிலீஸ் ஆகவுள்ள கோப்ரா படத்தின் செம அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

Pushpa the rule allu arjun pushpa part 2 update புஷ்பா

People looking for online information on Allu Arjun, Pushpa, Pushpa The Rise, Pushpa The Rule, Rashmika Mandanna will find this news story useful.