இணையத்தை ஆட்டி படைக்கும் சமந்தா" ஓ சொல்றியா மாமா" .. தொடர்ந்து முதல் இடத்தில் சாதனை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை :அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த புஷ்பா படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் பாடல்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.

Advertising
>
Advertising

ஓ சொல்றியா மாமா பாடல் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அவை அனைத்தையும் உடைத்தெறிந்து டாப் ஹிட் லிஸ்டில் நிற்கிறது.

இப்படம் வெற்றிபெற கடுமையாக உழைத்த இப்படக்குழுவினர், இப்படத்தின் வெற்றியை  கொண்டாடி வருகின்றனர்.


கவர்ந்த புஷ்பா:

கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளிவந்த புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இதன் பாடல்களும் ஐந்து மொழிகளில் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ளது. "சாமி சாமி" மற்றும் "ஓ சொல்றியா மாமா" பாடல்கள் ஐந்து மொழிகளிலும் வேறுவேறு பாடகர்கள் பாடியுள்ளதால் வைரலாகி மாபெரும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து பாடகிகள்:

நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து, பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கி, வெளிவந்த புஷ்பா படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் பகத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தில் வரும் "ஓ சொல்றியா மாமா", "சாமி சாமி" மற்றும் "ஸ்ரீ வள்ளி" பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. எல்லா சமூக வலைதளங்களிலும் இந்தப் பாடலைப் பற்றிய விஷயங்கள் பரவியுள்ளன. 5 பாடகிகளும் தனது மொழிகளில் உள்ள ரசிகர்களை மிகச்சுலபமாக கவர்ந்து இப்பாடல்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

ட்ரெண்டிங்கில் முதலிடம்:

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு மிகவும் உழைத்திருப்பார் போல,  இவர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தில் நான் மிகவும் கடுமையாக உழைத்து இருக்கிறேன் என கூறியிருந்தார். தற்போது அது உண்மையாகிவிட்டது. இரண்டு பாடல்கள் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது. ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் இப்பாடல்களை கொண்டாடி வருகின்றனர். மேலும் ஸ்ரீ வள்ளி என்ற பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.இந்த பாடலை நான்கு மொழிகளிலுமே இவர் தான் பாடியுள்ளார். இதுவும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Global YouTube charts:

இந்நிலையில் Global YouTube charts-ல் புஷ்பா படத்தின் ஆல்பம் தொடர்ந்து  தன் கைவசம் வைத்துள்ளது. ஐந்து மொழிகளிலும் முதலிடத்தில் இந்தப் பாடல்கள் இருக்கின்றன.  Global YouTube charts-ல் முதலிடத்தில் தெலுங்கின் 'ஓ அன்டவா' பாடலும், நான்காவது இடத்தில் சாமி சாமி பாடலும்,54-வது  இடத்தில் ஸ்ரீ வள்ளி பாடலும் இடம் பெற்றிருக்கின்றன. ஐந்து மொழிகளிலுமே  இந்தப் படத்தின் பாடல்கள் அந்தந்த மொழிகளில் முதலிடத்தில் இருக்கின்றன. இந்தப் பாடல்கள் ரிலீஸ் ஆனதிலிருந்து இன்று வரையிலும் வைரலாகி டிரெண்டிங்கில் முதலிடத்தில் நீடிக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Pushpa song takes first place in Global YouTube chart

People looking for online information on Allu Arjun, அல்லு அர்ஜுன், சமந்தா, புஷ்பா, ரஷ்மிகா, Global YouTube chart, Pushpa, Samantha will find this news story useful.