இயக்குநர் சிகரம் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் கே. பாலச்சந்தர். இவர் மிகவும் யதார்த்தமான மற்றும் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார்.
இவர் ரஜினி, கமல் என தமிழின் தற்போதைய முன்னணி நாயகர்களை தமிழில் இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் இறுதியாக கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் படத்தில் இணைந்து நடித்திருந்தார். இவர் 2014 டிசம்பர் 23 ஆம் தேதி மறைந்தார்.
இந்நிலையில் அவரது பிறந்தநாள் என்பதால் அவரது மகள் புஷ்பா கந்தசாமி அவரது நினைவுகள் குறித்த Behindwoodsக்கு டிவிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது தளபதி விஜய் நடிப்பில் கவிதாலயா புரொடக்ஷன் தயாரித்த 'திருமலை' படம் குறித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், சாமி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து ஒரு படம் செய்யலாம் என்று இருந்தோம். விஜய்யிடம் கேட்டோம். அவர் ரமணா என்ற இயக்குநரிடம் ஒரு கதை இருக்கிறது. கேட்டு பாருங்கள் என்றார்.
நாங்கள் ரமணாவை அழைத்து கதை கேட்டோம். அவர் இரண்டரை மணி நேரம் கதை சொன்னார் . அவர் என்ன சொன்னாரோ அதைத் தான் படமாக எடுத்தார். அந்த படம் புதுப்பேட்டை செட் போட்டு எடுத்தோம். கதிர் தான் செட் போட்டார். ரத்னவேலு சிறப்பாக படமாக்கியிருந்தார். அதுவரை விஜய் காதல் படங்களில் நடித்து மிகப் பெரிய ஹிட் கொடுத்திருந்தார்.
இந்த படம் அவருக்கு ஆக்ஷன் ஹீரோவாக அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அது எங்கள் பேனரில் அமைந்தது இன்னும் பெருமை'' என்றார்.