'அடப்பாவிங்களா ! உலகமே கொரோனா பயத்துல போராடிட்டு இருக்கு' - பிரபல இயக்குநர் வெளியிட்ட வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உலகமே கதிகலங்கி போய் உள்ளது. முறையான தீர்வு எதுவும் காணப்படாததால் மருத்துவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதுவரை கொரோனாவால் உலக அளவில் 18, 000க்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலும் தற்போது கொரோனாவால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தாலி , சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக இத்தாலி கொரோனா பாதிப்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு இந்தியாவும் அத்தகைய நிலையை அடைந்துவிடக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். எளிதில் பரவக்கூடிய வியாதி என்பதால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க இத்தகைய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

ஆனால் மக்கள் சிலருக்கு இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் வழக்கம் போல் வெளியில் உலவுகின்றனர். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் மக்களை வீட்டிலேயே இருக்கும் படி சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் பூரி ஜெகந்நாத் தனது ட்விட்டர் பக்கத்தில், இத்தாலி, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதையும், இந்திய மக்கள் வெளியில் உலவுவதையும் குறிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ட்விட்டர் பக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனாவால் இந்தியா மற்றும் இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளின் நிலைமை குறித்து பூரி ஜெகந்நாத்

People looking for online information on Coronavirus, India, Italy, Narendra Modi, Puri Jagannadh will find this news story useful.