RIPDEEPSIDHU: 'டெல்லி’ விவசாயிகள் போராட்டத்தில் பிரபலமான இளம் நடிகர் தீப் சித்து விபத்தில் மரணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RIPDeepSidhu, 15, பிப்ரவரி 2022: டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் மீது பிரபலமான, பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

டெல்லி விவசாயிகள் போராட்டம்

கடந்த வருடம், ஜனவரி மாதம், டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்துவின் பெயர் பிரபலமானது. இவர் தான் தற்போது டெல்லியின் குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) எக்ஸ்பிரஸ்வே சாலையில் செல்லும்போது கார் விபத்துகுள்ளாகி இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இருந்து...

15, பிப்ரவரி - 2022, இரவு 9.30 மணிக்கு, இந்த கார் விபத்து நடந்தாக சொல்லப்படுகிறது. டெல்லியில் இருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவுக்கு தீப் சித்து  சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவர் சென்ற கார் டிரெய்லர் டிரக் மீது மோதியதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் இந்த விபத்தில், அவருடன் பயணித்த பெண் ஒருவரும் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் தீப் சித்து

நடிகர் தீப் சித்து, பஞ்சாப் மாநிலம், முக்த்சரில் பிறந்த மாடலிங் உலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் 2015-ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், சட்டக்கல்லூரியில் பயின்றவர்.

அரசியல் ஈடுபாடு

இதனால் பஞ்சாபிகளின் அபிமானத்தைப் பெற்ற இவர்,  2019 நாடாளுமன்றத் தேர்தலில், பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். டெல்லி விவசாயப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடு காட்டிய இவர், செங்கோட்டை வரை போராட்ட பேரணி நடத்தி டெல்லியிலும் பிரபலமானார்.

Also Read: இப்ப குழந்தைகளும் பீஸ்ட் மோடுல தான்.. வைரல் குட்டி விஜய், அனிருத், பூஜா - அரபிக் குத்து

தொடர்புடைய இணைப்புகள்

Punjabi actor deep sidhu dies in accident தீப் சித்து விபத்து

People looking for online information on Accident, Deep Sidhu, Deep Sidhu Dies, Delhi, Punjabi actor deep sidhu dies, RIP Deep Sidhu, RIPDeepSidhu will find this news story useful.