பெங்களூர்: புனித் ராஜ்குமாரின் கடைசி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
![Puneet Rajkumar James Movie Emotional Teaser Released in All South Languages Puneet Rajkumar James Movie Emotional Teaser Released in All South Languages](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/puneet-rajkumar-james-movie-emotional-teaser-released-in-all-south-languages-new-home-mob-index.jpeg)
போடு வெடிய: தனுஷ் - செல்வராகவன் படத்தில் இணைந்த பிரபல அஜித் பட ஒளிப்பதிவாளர்! இவர் தான்
கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு கடந்த ஆண்டு (29.10.2021) அன்று உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். டைசியாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான யுவரத்னா திரைப்படத்தில் வெள்ளித்திரையில் காணப்பட்டார் புனித், இப்படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கியிருந்தார்.
தற்போது ஜேம்ஸ் என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வந்தார். சேத்தன் குமார் எழுதி இயக்கிய ஜேம்ஸ், கடந்த ஆண்டு அக்டோபரில் புனித் அகால மரணம் அடையும் முன் கடைசியாக நடித்த படம்.
ஒரு பாடல் மற்றும் ஒரு ஆக்ஷன் காட்சியைத் தவிர அனைத்து முக்கிய பகுதிகளையும் நடிகர் புனித் ராஜ்குமார் நடித்து முடித்திருந்தார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் (26.01.2022) அன்று வெளியாகி இருந்தது. ராணுவ வீரராக இந்த படத்தில் புனித் நடிக்கிறார். சினிமாவில் மிகவும் அரிதான நிகழவாக ஒரு நடிகர் இறந்த பின் அவரது திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்த படத்தின் டீசர் இன்று (11.02.2022) வெளியாகி உள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளிலும் டீசர் வெளியாகி உள்ளது. தொழிலை விட உணர்வு முக்கியமானது என அடைமொழியுடன் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் புனித் ராஜ்குமாரின் ரசிகர்களை உணர்ச்சி பெருக்கெடுக்க வைத்துள்ளது. கலைஞர்களுக்கு சாவே இல்லை என புனித் ராஜ்குமார் மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார்.
இந்த படம் புனித்தின் பிறந்தநாளுக்கு மார்ச் 17,2022 அன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் அனு பிரபாகர், ஸ்ரீகாந்த், ஆர். சரத்குமார், திலக் சேகர், மற்றும் முகேஷ் ரிஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைப்பட உலகின் முன்னணி நடிகராக விளங்கிய புனித் ராஜ்குமார். இவர் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், நடிகர் சிவ ராஜ்குமாரின் தம்பியுமாவார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் 1985 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக இருந்த பொழுது தேசிய விருதை வென்றவர்.4 முறை கர்நாடக மாநில விருதையும், 5 முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் வென்றவர்.
தனுஷ் கொடுத்த டபுள் ட்ரீட்! "நானே வருவேன்" படத்தின் புதிய போஸ்டர்.. செம கேப்சனுடன் வெளியீடு!