அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் அனல் பறக்கும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தளபதி 64 படத்தின் பிரபலம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் நேற்று (அக்.12ம்) தேதி மாலை 6 மணிக்கு ரிலீசானது. பிகில் படத்தில் விஜய்யின் வித்தியாசமான லுக், மாஸ் கிளப்பும் அவரது வசனங்கள், ஸ்டைல் என அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில், தளபதி விஜய்யின் தீவிர ரசிகரும், நடிகருமான சாந்தனு ட்விட்டரில் பிகில் டிரைலர் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், “ஏக் தோ தீன்.. போட்றா வெடிய.. இந்த ஆட்டம் சும்மா வெறித்தனமா இருக்கப்போகுது. தளபதி விஜய்யோட ஓல்ட் கெட்டப் மரண மாஸ். அட்லி ப்ரோ அடிச்சு தும்சம் பண்ணிட்டீங்க.. புல்லிங்கோ நாங்க வெயிட்டிங்..” என ட்வீட் செய்துள்ளார். நடிகர் சாந்தனு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தீபாவளி பண்டிகைக்கு போட்றா வெடிய என வெறித்தனம் கூட்டும் விதமாக வெளியாகவிருக்கும் ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.