VIDEO: பவித்ரா-க்கு பர்த்டே.. CORRECT-ஆ 12 மணிக்கு புகழ் கொடுத்த சர்ப்ரைஸ் தெரியுமா? TRENDING!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலரும் இன்றைய நாட்களில் ட்ரெண்டிங்கல் உள்ளனர். விஜய் டிவியில் சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித்திரை நடிகையாக வளர்ந்து இருக்கிறார் நடிகை பவித்ரா. அவருக்கு தான் இன்று பிறந்தநாள். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பவித்ராவுக்கும் புகழுக்குமான காம்போ பலருக்கும் பிடித்தமானதாக இருந்தது.

அவர்களின் நட்பு மிகவும் க்யூட்டாக ஒன்று என்பதால் இவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்த நிலையில் பவித்ராவுக்கு இந்த பிறந்தநாளில் குக் வித் கோமாளி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். 12 மணி ஆனதும் புகழ் சர்ப்ரைஸாக பவித்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திரக்கிறார் . அந்த வாழ்த்தில்,  “ஹேப்பி பர்த்டே தங்கம்.. நல்ல ஃப்ரண்டா கடைசி வரைக்கும் இருப்போம்” என குறிப்பிட்டு பவித்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை புகழ் பகிர, இதற்கு பவித்ரா, “எப்பவுமே.. தேங்க் யூ பெஸ்டே... ” என பதில் அளித்துள்ளார்.

இதேபோல் பவித்ரா மற்றும் சக்தி இருவரின் அக்கா தம்பி காம்பினேஷனும் பலருக்கும் பிடித்தமான ஒன்று. சக்தியும் பவித்ராவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்த வாழ்த்தில், “ஹேப்பி பர்த்டே அக்கா.. எப்பவுமே சிரிச்சிட்டே இருங்க... தம்பி நான் இருக்கேன்!” என குறிப்பிட, இதற்கு “தங்கமே..” என பவித்ரா பதில் அளித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ராவுடன் இணைந்து ஒரு எபிசோடில் கலந்துகொண்ட பவித்ராவின் நண்பர் சுதர்ஷனும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  அந்த வாழ்த்தில், “ஹேப்பி பர்த்டே ஃப்ரண்ட்... ட்ரீட் கொடு ஃப்ரண்டு” என கேட்க,  இதற்கு பவித்ரா, “கடலை மிட்டாய் .. கமர் கட்டு எல்லாமே ரெடியா இருக்கு ஃப்ரண்டு.. ” என தெரிவித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னரான கனி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருடைய வாழ்த்தில் , “ஹேப்பி பர்த்டே பவித்ரா குட்டி” என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு பவித்ரா, “தேங்க் யூ அக்கா!” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: "இந்தா வந்துருச்சுல்ல.. " CWC சீசன் 3-க்கு முன்பே தரமான இன்னொரு Show! கலக்கல் Promo!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் நிறைவு அடைந்திருக்கும் நிலையில் மூன்றாவது சீசனை காண மக்கள் ஆவலுடன் தொடர்ந்து எதிர்பார்த்து வருகின்றனர். இதனிடையே இன்னொரு பலமான காமெடி நிகழ்ச்சியை களமிறக்குகிறது விஜய் டிவி. ஆம் அந்த காமெடி ராஜா கலக்கல் ராணி என்கிற நிகழ்ச்சி தான் அது. இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் விஜய் டிவியில் வைரலாகி வருகின்றன.‌

VIDEO: பவித்ரா-க்கு பர்த்டே.. CORRECT-ஆ 12 மணிக்கு புகழ் கொடுத்த சர்ப்ரைஸ் தெரியுமா? TRENDING! வீடியோ

Pugazh surprise on pavithra birthday viral video cookwithcomali

People looking for online information on Pavithra Lakshmi, Pugazh will find this news story useful.