புகழின் காதலி அஜீத் ரசிகையாமே? LOVE U PARTNER-னு ஒரே ஒரு POSTதான்.. செம வைரல்.. யாருப்பா இந்த ரியா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay TV Pugazh: விஜய் டிவியில், ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு', குக் வித் கோமாளி உள்ளிட்ட நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் புகழ்.

Advertising
>
Advertising

குக் வித் கோமாளி' சீசன் 2

குறிப்பாக, 'குக் வித் கோமாளி' சீசன் 2 -ல் தன்னுடைய காமெடியால் பலரையும் ஈர்த்த புகழ், தனக்கே உரிய பாடி லாங்குவேஜ் மற்றும் முகபாவனையால் பலரையும் சிரிக்க வைக்கும் ஒரு கலைஞராக திகழ்கிறார்.  இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அடுத்து, பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான புகழ், தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

புகழ் நடித்த படங்கள்

அண்மையில் வெளியான சந்தானத்தின் சபாபதி திரைப்படத்தில் புகழ் முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து ஹரிஹரன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலமான அஸ்வின் குமார் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸான ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்திலும் புகழ் நடித்திருந்தார்.

ஹேப்பி பர்த்டே அண்ணி

இந்நிலையில் தான் புகழ் காதலியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதை பார்த்த மைனா நந்தினியின் கணவரோ,  ‘ஒரு வழியாக சொல்லிட்டீங்களே புகழ்’ என்று கமெண்ட் அடித்ததுடன், ‘வாழ்த்துக்கள் சகோதரி, ’ என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து புகழுக்கு நெருக்கமான பிரபலங்களும், ரசிகர்களும், ‘வாழ்த்துக்கள் அண்ணி’ என்று சொல்லி புகழின் காதலிக்கு தங்களின் அன்பு வாழ்த்துகளை கூறி வந்தனர்.

யார் இவர்?

அதன் பின்னர், புகழின் காதலி யாரென அவரது இன்ஸ்டாகிராமை தேடிப் பார்த்தால் அதில், மல்லு பெண், தல ராக்ஸ், எஸ்.டி.ஆர். ரசிகை என்று ப்ரொஃபைலில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆம், அஜீத் குமாரின் தீவிர ரசிகையான புகழின் காதலியின் பெயர் பென்ஸ் ரியா. இவரை ஏற்கனவே புகழின் நெருங்கிய நண்பகள் பலருக்கும் தெரிந்திருக்கிறது என்பதை புகழின் பழைய புகைப்படங்களை பார்த்தாலே தெரியவரும்.

Also Read: "இளையராஜாவுக்கே தெரியாதாம்!".. விண்வெளியில் ராஜா பாட்டு ஒலிக்க போகுதா? உண்மை என்ன? Exclusive

தொடர்புடைய இணைப்புகள்

Pugazh Partner Pugazh girlfriend benz riya details

People looking for online information on Cook with comali, Pugazh girlfriend Riya, Pugazh Partner Pugazh girlfriend, Who is Pugazh girlfriend will find this news story useful.