தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல உள்ளிட்ட படங்களில் வரிசையில் இருக்கிறது. இந்த வருடம் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான வருடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் 'மாநாடு' . கல்யாணி ப்ரியதர்ஷினி, பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநாடு படத்தின் டீசரை சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் வெளியிட்டார். குக் வித் கோமாளி புகழ் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து எல்லாவகையான வேலைகளையும் செய்து இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளார். சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். எனினும் பழைய நிலைமையை மறக்காது இன்றும் தாழ்மையுடன் ரசிகர்களோடு அவர் உறவாடும் விதம் பலரையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் புகழ் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது. சிம்புவும் அவரும் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது.