கண்ணீருடன் குக் வித் கோமாளி புகழ்.. இதுலையும் இப்படி பின்றாரே... தரமான நடிகன்டா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளைகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடனே போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

இந்நிலையில் கடந்த சீசன் கோமாளிகளான புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி போன்றோர் இந்த சீசனிலும்  பங்கெடுத்துள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 2 கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. எனினும் இந்த சீசன் பலருக்கும் எப்போது பேவரைட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
குக் வித் கோமாளி புகழ் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து எல்லாவகையான வேலைகளையும் செய்து இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளார். சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். எனினும் பழைய நிலைமையை மறக்காது இன்றும் தாழ்மையுடன் ரசிகர்களோடு அவர் உறவாடும் விதம் பலரையும் ஈர்த்துள்ளது. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

மேலும் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி, சந்தானம் மற்றும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். புகழ் இப்போது ஒரு திரைப்படத்திற்காக டப்பிங் பேசியவீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கண்ணீருடன் இருப்பது போல் தெரிகிறது. இது எந்த குறிப்பிட்ட திரைப்படத்திற்காக என்று தெரியவில்லை என்றாலும் ரசிகர்கள் அவரது அர்ப்பணிப்பை பார்த்து வியந்துள்ளனர்.

கண்ணீருடன் குக் வித் கோமாளி புகழ்.. இதுலையும் இப்படி பின்றாரே... தரமான நடிகன்டா..! வீடியோ

Tags : Pugazh

தொடர்புடைய இணைப்புகள்

Pugazh in tears latest video goes viral கண்ணீருடன் குக் வித் கோமாளி புகழ்

People looking for online information on Pugazh will find this news story useful.