குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பு இருந்தது.

அதில் நடித்த அஸ்வின்,பவித்ரா, ஷிவாங்கி, புகழ், தர்ஷா, பாலா, பாபா பாஸ்கர், ரித்திகா என அனைவருக்கும் அவர்களுக்கென்ற தனித்த ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
இரண்டு சீசன் முடிந்த நிலையில் இப்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த மூன்றாவது சீசனில் புகழ் மற்றும் ஷிவாங்கி கோமாளிகளாக பங்கெடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது. ஏனெனில் புகழ் மற்றும் ஷிவாங்கி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
குறிப்பாக புகழ், தல அஜித்துடன் “வலிமை” படத்திலும். ஷிவாங்கி “காசேதான் கடவுளடா” படத்திலும் நடிக்கிறார்கள். ஆகையால் மூன்றாவது சீசனில் இவர்கள் பங்கு பெறுவது என்பது சற்றுக்கடினமானது என கூறப்படுகிறது.