"புகழ் மட்டும் கார் வாங்கிட்டாரு.. ஆனா".. ஃபீல் பண்ணிய பாலா ரசிகர்.. புகழின் நெகிழ வைத்த பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தனக்கே உரிய எதார்த்த நகைச்சுவை கலாட்டா மிடுக்குத் தனங்களால் புகழ்பெற்றவர் புகழ்.

ஒரு சில படங்களில் நடித்துள்ள புகழுக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அண்மையில் புகழ் சொந்தமாக ஒரு கார் வாங்கியதுடன், தான் கார் வாஷ் பணியை இதற்கு முன்னதாக செய்துவந்ததாகவும் தனது பரம்பரையிலேயே தான் தான் முதன்முதலில் சொந்தமாக கார் வாங்கியதாகவும் தனக்கும் தமது ரசிகர்களுக்கும் இது ஊக்கம் தரும் ஒன்று என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பலரும் வாழ்த்து சொல்லிவந்த நிலையில், விஜய் டிவி நகைச்சுவை பிரபலமான பாலாவின் ரசிகர் ஒருவர் அழ, ஏன் என அவரிடம் இன்னொரு ரசிகர் கேட்க, அந்த ரசிகரோ, பாலா கார் வாங்கவில்லை என தமது வருத்தத்தை பதிவு செய்ய, இதை அறிந்த புகழ், ‘இது பாலாவின் காரும் தான் நண்பா.. நாங்க வேறவேற இல்லை!’ என்று பதில் அளிக்க, இதைப் பார்த்த பாலா, “லவ் யூ மாமே.. நம்ம கார் இது” என புகழுக்கு பதில் அளித்தார்.

‘நம் நண்பன் ஜெயிச்சா, நாமும் ஜெயிச்ச மாதிரி தான் பா’ எனும் பாணியில் இவர்களின் இந்த பொறாமைகளற்ற, நெகிழ்ச்சிக்குள்ளாக்கும் நட்பு  பல ரசிகர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளது.

ALSO READ: "ஐயோ.. ஆள விடுங்க".. அலறி எஸ்கேப் ஆகும் DD!.. எங்க போயிருக்காங்க பாருங்க!

"புகழ் மட்டும் கார் வாங்கிட்டாரு.. ஆனா".. ஃபீல் பண்ணிய பாலா ரசிகர்.. புகழின் நெகிழ வைத்த பதில்! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pugazh and bala heartfelt replies to Bala fan புகழ் பாலா

People looking for online information on Bala, Pugazh, Trending, Vijaytv will find this news story useful.