வாரிசு இசை வெளியீட்டு விழா.. விஜய் பேசியதை ஆர்வமுடன் பார்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆர்வத்துடன் பார்க்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | விக்ரமன் பற்றிய மீம்.. பார்த்ததும் விழுந்து சிரிச்சிட்டாரு.. இன்றைய பிக்பாசில்..!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார். வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரித்திருக்கின்றனர். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இந்த படம் வரும் பொங்கல் நாளை (ஜனவரி 11) திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றியுள்ளார்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 ஆம் தேதியன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் நடிகர் விஜய் பேசியவை சமூக வலை தளங்களில் ட்ரெண்டாகி வந்தன. இந்நிலையில், வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுவதை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆர்வத்துடன் பார்க்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | 'துணிவு'-ல அஜித் குமார் கேரக்டர் பெயர் இதுதானாம்.. வெளியான மாஸ் தகவல்..!

தொடர்புடைய இணைப்புகள்

Puducherry CM Rangasamy watch vijay speech at varisu audio launch

People looking for online information on Puducherry CM, Puducherry CM Rangasamy, Varisu, Varisu Audio launch, Vijay, Vijay speech will find this news story useful.