பிரபல யூடியூபர் பப்ஜி மதன் அண்மையில் யூடியூபில் ஆபாசமாக பேசிய குற்றங்களுக்காக சைபர் பிரிவு போலீஸாரால் தேடப்பட்டு வந்தார்.
பின்னர் அவரது மனைவி தான் அவரது சேனலுக்கு அட்மின் என்றும் அதில் பேசிய பெண் குரலுக்கு சொந்தக்காரர் என்றும் தகவல்கள் வெளியானது. இதனிடையே தேடப்பட்டு வந்த பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா, தற்போது பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார். அவர் தெரிவிக்கும் போது, “தடை செய்யப்பட்ட விளையாட்டை எனது கணவன் மதன் விளையாடவில்லை, பப்ஜி விளையாடி கடந்த 10 ஆண்டுகளாக சொத்து சேர்க்கவில்லை, ஆடி கார் மட்டுமே எங்களிடம் உள்ளது- சொகுசு கார் எங்களிடம் இல்லை. என்னுடைய வங்கி கணக்குகள் முடக்கம்- வீட்டு சாவிகள் போலீசாரிடம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூறியவர், “மதன் என்னுடைய வங்கி கணக்கை மட்டுமே பயன்படுத்தி வந்தார். எனது கணவர் பப்ஜி மதன் 20 மணி நேரம் வேலை செய்து பணம் சம்பாதித்தார்” என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.