"பொன்னியின் செல்வன்" படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது .

Advertising
>
Advertising

Also Read | நானி கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ஆக்சன் திரைப்படம் 'தசரா'.. ஷூட்டிங் இந்த ஊர்லயா? தெறி அப்டேட்

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து பிரபல OTT நிறுவனமான டென்ட்கொட்டா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை பிரபல சரிகம சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதனை லைக்கா நிறுவனம் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளது.

 

Also Read | பிரேமம் புகழ் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் 'GOLD'.. தமிழ் போஸ்டர் செமயா இருக்கே!

தொடர்புடைய இணைப்புகள்

PS1 Ponniyin Selvan Movie USA Theatrical Rights Bagged by Sarigama Cinemas

People looking for online information on Maniratnam, Ponniyin Selvan Movie updates, Ponniyin Selvan part 1, Sarigama Cinemas will find this news story useful.