PS1 'பொன்னியின் செல்வன்' படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போ? எங்கே? சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கமல்ஹாசனை சந்தித்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்.. இணையத்தில் டிரெண்டாகும்‌ கமலின் Latest Look!

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், உடையார் ஶ்ரீ ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், டீஸர் & முதல் இரண்டு சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. A R ரஹ்மான் இசையில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் அனைத்து மொழி (தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்) ஆடியோ இசை உரிமைகளையும் மும்பையை தலைமையிடமாக கொண்ட  டிப்ஸ் (TIPS) நிறுவனம்  கைப்பற்றியுள்ளது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று நடக்கும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

 

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. தமன் இசையில் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போ?

PS1 Ponniyin Selvan Movie Audio Launch at Nehru Indoor Stadium

People looking for online information on Nehru indoor stadium, Ponniyin Selvan Movie Audio Launch, Ponniyin Selvan part 1 will find this news story useful.