அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக பன்மொழிகளில் வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இதனையொட்டி இப்படத்தில் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பார்த்திபன் தஞ்சைக்கு சென்று, இதனை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம், பார்த்திபனுக்கு நன்றி சொல்லி அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜில், “நன்றி பார்த்திபன் சார்.. இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நன்றி, இந்த படத்தின் சின்ன பழுவேட்டரையர் கேரக்டருக்கு வலிமை சேர்த்தற்கு நன்றி, நேரமெடுத்து ஷூட்டிங் நேரத்தில் மெனெக்கெடுத்ததற்கு நன்றி. மற்றும் தஞ்சாவூர் சென்றதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி ஜாலியாக கமெண்ட் பண்ணியுள்ள நடிகர் பார்த்திபன், “2 வரிகள் பேசவே, 98% ஜிஎஸ்டி போடும் மனிதரிடம் இருந்து 5.2 வரிகள் பாராட்டு - பாரே சீழ்க்கை அடிப்பது போலுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.