PS1: உதவி இயக்குநரா இருந்தப்போ.. த்ரிஷாவுக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்த நடிகர் கார்த்தி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "பாத்துக்கலாம்.. கிடைக்குறது கிடைக்காம இருக்காது".. கமல், ரஜினி பஞ்ச்'களை பேசிய ஜெயம் ரவி.!

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஜெயராம், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபனின் தோற்றங்கள் வெளியாகின. மேலும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பூங்குழலி கதாபாத்திரத்திலும், நடிகை சோபிதா துலிபாலா வானதி கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக விக்ரம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோருடன் வெவ்வேறு திரைப்படங்களில் காதலராக நடித்துவிட்டு, தற்போது அவர்களின் சகோதரியாக நடிப்பது குறித்து பேசிய த்ரிஷா, படம் பார்க்கும்போது அப்படி எதுவுமே தோன்றாதபடி இருக்கும் என்றும், அனைவரும் கதாபாத்திரங்களாகவே தெரிவோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  இதேபோல், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா குறித்து பேசிய நடிகர் கார்த்தி,  “ஜெயம் ரவி என்னுடைய கல்லூரி நண்பன் மாதிரி. எந்த பொறாமையும் இல்லாமல் பேசி நடித்தோம். மிகவும் வசதியாக இருந்தது.” என பேசினார்.

மேலும் பேசியவர் த்ரிஷா பற்றி பேசும்போது, “நான் உதவி இயக்குனராக இருந்த போது, த்ரிஷாவுக்கு பைக் ஓட்ட சொல்லி கொடுத்தேன். இன்று அவருடன் நடிக்கிறேன்” என்றார்.

Also Read | கடும் குளிரில் 20 அடி ஆழ நீருக்கு அடியில் ஆர்யா.. ‘கேப்டன்’ படத்துக்காக எடுத்த முயற்சி.!

தொடர்புடைய இணைப்புகள்

PS1 karthi taught bike driving trisha when he was AD

People looking for online information on Jayam Ravi, Karthi, Ponniyin Selvan, Ponniyin Selvan Audio and Trailer Launch, Ponniyin Selvan Audio Launch, Trisha will find this news story useful.