ஆகாய மார்க்கமாக வந்தியத்தேவன்.. அருண்மொழி வர்மன்.. ஆதித்த கரிகாலன்.. உடன் வருவது யார் பாருங்க.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

Advertising
>
Advertising

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள். 

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோர் ஃபிளைட்டில் ஹைதராபாத் செல்லக்கூடிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். இந்தியா முழுவதும் வெளியாகும் பிரம்மாண்ட பான் இந்திய படமான பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு இந்திய நகரங்களுக்கும் சென்றுவருகின்றனர்.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

PS1 Karthi Jayam Ravi Vikram Aishwarya Lekshmi flight viral pic

People looking for online information on Aishwarya rai, AR Rahman, Jayam Ravi, Karthi, Lyca Productions, Mani Ratnam, Ponniyin Selvan, Ponniyin Selvan part 1, Sobhita Dhulipala will find this news story useful.