நடிகர் அஜித் குமார் கடைசியாக H.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபித்த வரவேற்பு பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் தன்னுடைய அடுத்த படத்தில் பிஸியாகிவிட்டார். அவ்வப்போது நாம் நினைக்கும் கருத்துக்களை தம்முடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்து வரும் அஜித் குமார், பல முறை ரசிகர்களின் நலன்கள் குறித்து வேண்டுகோள்களை விடுத்திருக்கிறார்.
இதேபோல் தன்னை தல என அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் தான் தற்போது உடல் ஆரோக்கியம் மற்றும் அக்கறையின் பேரில் ஒரு புதிய தகவலை தம்முடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் நடிகர் அஜித் குமார் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது, ஒரு விதமான சத்தம் நம்முடைய காதுகளில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் நிச்சயம் காதுகள் அதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம், இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து காதுகளில் அதிக சத்தங்களை கேட்பதாலும் சில சமயங்களில் தலையில் அடிபடுவதாலும் மருத்துவ ரீதியான பின்விளைவுகளாலும் உண்டாகலாம்.
இதுகுறித்த இணையத் தகவல்களை கூகுள் தரவுகளுடன் பகிர்ந்திருக்கும் சுரேஷ் சந்திரா, “மக்கள் அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.. உடனடியாக காதை கவனித்து பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தம் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
அதனுடைய கேப்ஷனில் ‘காதுகளை கவனித்துக் கொள்ளுங்கள் - என்றும் அளவில்லா அன்புடன் அஜித் குமார்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.