அடடே!.. 'அஷ்வின் மீது ரசிகர்களின் அன்புக்கு இதுதான் சாட்சி'!.. அவரே வெளியிட்ட பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் நடிகர் அஷ்வின். எத்தனையோ குறும்படங்களிலும் சில பெரிய படங்களிலும் நடித்து புகழ்பெற்ற அஷ்வின் குக் வித் கோமாளியின் தனது இயல்பான குணத்தால் பல ரசிகர்களை பெற்றார்.

அத்துடன் அஷ்வின் சிவாங்கி காம்போ பெரிய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்று இவர்களுக்கு அசாங்கி எனும் ரசிகர்கள் பட்டாளமே குவிந்தனர். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் கனி டைட்டில் கார்டு வென்றிருந்தார். ஷகிலா முதல் ரன்னராகவும், அஷ்வின் 2வது ரன்னராகவும் இடம் பெற்றனர். இந்நிலையில் அஷ்வினுக்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் 2 மில்லியன்களைக் கடந்துள்ளனர்.

இதுபற்றி தமது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ள அஷ்வின், “உங்கள் அன்பு தான் என் கனவுகளை நோக்கி என்னை இட்டுச் செல்கிறது. 2 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுடன் இந்த குடும்பம் பெருகியுள்ளது. உங்களை மகிழ்விக்கும் எனது பொறுப்புகளும் பெருகுகிறது!” என குறிப்பிட்டுள்ளார்.

அஷ்வின் இப்போது புகழுடன் இணைந்து டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் புகழ் காமெடியனாக நடிக்கிறார். இதனிடையே அஷ்வின் நடித்த குட்டி பட்டாஸ் ஆல்பமும் நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது.

ALSO READ: "500 படத்துக்கு மேல நடிச்சுட்டேன்.. ஆனா இப்படி ஃபீல் பண்ணதில்ல".. ஷகிலா எமோஷனல் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Proof for fans love Ashwin Cook with Comali instagram

People looking for online information on Ashwin, Cook with comali, Trending will find this news story useful.