முன்னணி தமிழ் ஹீரோவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரில்லர் படத்தின் புதிய அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் வழங்கும், தினேஷ்  லக்ஷ்மணன்  இயக்கும் புத்தம் புதிய  க்ரைம் திரில்லர் திரைப்படம் ஆக்‌ஷன் கிங் அர்ஜீன்,  ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  உருவாகிறது!

இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன்  எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, GS ARTS சார்பில் தயாரிப்பாளர் G. அருள் குமார் தயாரிக்கிறார். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவாளர், பரத் ஆசீவகன் இசையமைப்பாளர், லாரன்ஸ் கிஷோர் எடிட்டர், அருண் சங்கர் துரை கலை இயக்குநர், விக்கி ஸ்டண்ட் மாஸ்டர், சுரேஷ் சந்திரா மக்கள் தொடர்பு பணிகளை செய்கிறார்.  ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய  பிரபலங்கள்  நடிக்கின்றனர்.

ஆக்சன் கிங்  அர்ஜூன் ஆக்‌ஷன், க்ரைம் படங்களுக்கு பெயர் பெற்றவர். அவர் நடித்த க்ரைம் ஆக்‌ஷன் படங்களின்  பிரமாண்ட வெற்றிகளை தொடர்ந்து, ஆக்‌ஷன் கிங் பட்டத்தை பெற்றவர். அவரது தொடர் திரில்லர் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து, புதிதாக மீண்டும் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் படம் குறித்து  கூறியதாவது ...

இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை,  ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்  இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இது மன இறுக்கம் கொண்ட  ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை  மையமாக கொண்ட  திரைப்படம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,  அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும். இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன் திரைக்கதையை முதன்முதலில்  விவரித்தபோது, ​​நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன். 

திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும்  பார்வையாளர்களுக்கு,  நீண்ட காலத்திற்குப் பிறகு  க்ரைம்-த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும். நடிகர் அர்ஜுன்  இந்த  வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும்,   இப்படம் அதிலிருந்து மாறுபட்டு,  தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என்றார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Production No 2 with Pooja Starring Aishwarya Rajesh

People looking for online information on Aishwarya Rajesh, Arjun will find this news story useful.