தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் குறித்து முக்கிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான தேதி மற்றும் மற்றைய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சென்னை உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட, தேர்தல் அதிகாரி எம்.ஜெயச்சந்திரன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதன்படி வரும் நவம்பர் மாதம் 22-ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடக்கவுள்ளது. சென்னை அடையாரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அட்டவணை..., வேட்புமனு விண்ணப்ப படிவம் வழங்கும் நாள்:- அக்டோபர் 15 காலை 11மணி முதல், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்:- அக்டோபர் 23, வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்:- அக்டோபர் 24, இறுதி வேட்பாளர் பட்டியல்:- அக்டோபர் 29, தேர்தல் நாள் நவம்பர் 22 என அறிவிக்கப்பட்டுள்ளது.