சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக OTT-ல் ரிலீஸாவது குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டரில் வெளியாகவிருந்த இத்திரைப்படம், அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் ரிலீஸ் திட்டம் குறித்து பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், ''அடுத்த சில மாதங்களுக்கு தியேட்டர்கள் திறக்குமா என தெரியாது. அப்படியிருக்க., ஒரு தயாரிப்பாளர் டிஜிட்டல் ரிலீஸை தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு முதலீடு செய்தவர்கள், அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை. மேலும் தியேட்டர்கள் எப்போதும் இருக்ககூடியது. அதை OTT-யுடன் கம்பேர் செய்ய கூடாது. அதுமட்டுமில்லாமல்., இன்னும் 75 படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது.
மேலும், இது ஒரு வியாபாரம். இதில் ஈகோ முக்கியமில்லை. எல்லோருமே ஒருவரை ஒருவர் சார்ந்து தான் இருக்கிறோம். திரைப்படமும் தியேட்டர்களும் இருந்தால்தான்., எல்லோராலும் லாபம் பார்க்க முடியும்'' என அவர் தெரிவித்தார்.