கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தை பற்றி அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவரின் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை இவர் கொண்டுள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்நிலையில் சுல்தான் படத்தை பற்றிய சூப்பரான தகவல்களை அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டு அவர், ''சுல்தான் படத்தின் 90 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. பெரும்பான்மையான எடிட்டிங் வேலைகளும் முடிந்தன. மீதமிருக்கும் வேலைகளையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் கம்பனி தயாரிப்பில் மிகப்பெரிய படமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் இருக்கும். இன்னும் ரிலீஸ் குறித்து எந்த திட்டமும் செய்யவில்லை'' என அவர் தெரிவித்துள்ளார்.