பிரபல தயாரிப்பாளர் ரவிந்திரன் வனிதா விஜயகுமார் வெளியிட்ட ஆடியோவுக்கு பதிலளித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் - பீட்டர் பாலுக்கு அண்மையில் நடந்த திருமணம் இணையத்தில் ஹாட் டாபிக் ஆனது. இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசெபத் ஹெலன் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் வனிதாவும் தனது தரப்பில் இருந்து இதுகுறித்து வீடியோ வெளியிட்டார்.
இதனிடையே பிரபல தயாரிப்பாளர் ரவிந்திரன் வனிதாவின் திருமணம் குறித்து அவரது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார். இதையடுத்து வனிதா அவரை வாட்சப்பில் தொடர்பு கொண்டதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லி ஒரு வாட்சப் ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும் ரவிந்திரன் தெரிவித்தார். மேலும் அந்த வாட்சப் ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய அவர், ''வனிதாவின் திருமணத்தில் நான் பேசிய காரணம், அவர் முறையாக டைவர்ஸ் பெறாமல் திருமணம் செய்ததும், பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலனும், அவர்கள் குழந்தைகளும் கொடுத்த பேட்டியை பார்த்த பிறகும்தான். அவரை பார்த்த ரசிகனான எனக்கு, அவர் செய்யும் தவறுகளின் மீது ஆதங்கள் உள்ளது. அதையே வெளிப்படுத்தினேன். இந்த விவகாரத்தில் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது'' என திட்டவட்டமாக தெரிவித்தார் ரவிந்திரன்.
இதுகுறித்து அவர் பேசிய முழு வீடியோ இதோ.