பிக்பாஸ் தர்ஷன், சனம் ஷெட்டி விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சனம் ஷெட்டி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் பிக்பாஸ் தர்ஷன் மீது, நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாம், ஆனால் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தர்ஷன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சனம் ஷெட்டி பேட்டியளித்தார்.

Producer Ravindhar comments about Bigg Boss Tharshan, Sanam Shetty, Kamal Haasan

பின்னர் தர்ஷனும் செய்தியாளர்களை சந்தித்து அவருடைய முன்னாள் காதலனுடன் தனியறையில் இருந்திருக்கிறார். அதற்கான ஆதாரம் மற்றும் இன்னும் அவரைப்பற்றிய பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறேன். என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்த சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதத்திற்குள்ளானது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் இந்த விவாகரம் குறித்து தன் கருத்துகளை தெரிவிக்கும் விதமாக Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''தர்ஷன், அவருக்கு கிடைச்ச பிரபலத்தன்மை காரணமாக கழட்டி விடப்பாக்குறாருனு சனம் ஷெட்டி இந்த விஷயங்களை லீகலாக எடுத்துப் போயிருக்கலாம். ஏன்னா அந்த பொண்ண ஒரு பக்கம் தப்பாவும் பேசுறாங்க. ஆதராவும் பேசறாங்க. இந்த விஷயத்தை பொது இடத்துக்கு கொண்டு வந்த சனம் ஓட இன்டென்சன் தப்பு நான் நினைக்குறேன்.

இன்னொரு பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தர்ஷனுக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஒரு பொண்ணு தன் மேல குறை கூறியதும் அவர் அதனை அவர் தவிர்த்திருக்கலாம். கமல் சார் கிட்ட கத்துக்க வேண்டியது அது தான். பல விஷயங்களுக்கு அசராம கண்டுக்காம போய்டுவாரு. சனம் பண்ற அதே தப்ப தான் இவரும் பண்றாரு. தர்ஷன் மட்டும் இதனை தவிர்த்திருந்தால் இது இன்று இவ்வெளவு பெரிய பிரச்சனையா இருந்துருக்காது'' என்றார்.

பிக்பாஸ் தர்ஷன், சனம் ஷெட்டி விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் அதிரடி வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Producer Ravindhar comments about Bigg Boss Tharshan, Sanam Shetty, Kamal Haasan

People looking for online information on Kamal Haasan, Ravindhar, Sanam Shetty, Tharshan will find this news story useful.