தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | PS2 : "ராஜராஜ சோழனை ஆளாக்கியவர் குந்தவை.." - ‘அகநக’ பாடல் பின்னணி குறித்து இளங்கோ கிருஷ்ணன்!
ரவீந்திரன் சந்திரசேகரன்
தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத் தமிழன் ஆகிய படங்களை விநியோகம் செய்துள்ளார். ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் குறித்து நம் Behindwoods-ல் தனது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ரவீந்திர் வழங்கி வந்தார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவர். இவர் பிரபல சீரியல் நடிகை விஜே மகாலட்சுமியை செப்டம்பர் 1, 2022-ல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. 90 ஸ் கிட்ஸ் மத்தியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
பிறந்தநாள்
திருமணத்திற்கு பிறகு, அவ்வப்போது தம்பதி சகிதமாய் புகைப்படங்களை பதிவிடும் ரவீந்தர் அதற்கு அளிக்கும் கேப்ஷன்கள் தான் அல்டிமேட்டாக அமையும். இதனாலேயே இவருடைய பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலாவதும் உண்டு. அந்த வகையில் ரவீந்தர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது மனைவி மகாலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கும் அவர் உருக்கமான பதிவு ஒன்றையும் எழுதியிருக்கிறார்.
அந்த பதிவில்,"பிறந்தநாள்... ஆம். இன்று என் மகாலக்ஷ்மிக்கு பிறந்தநாள்.பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள் என் மகாலக்ஷ்மி. வாழ்க்கைல அது இஷ்டத்துக்கு ஒன்னு வந்தாதான் அத அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. அந்த அதிர்ஷ்டம்தான் என் மகாலக்ஷ்மி. ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து எல்லா விஷேச நாட்களையும் கொண்டாடுவான். ஆனா அவன் பிறந்தத ஒரு விசேஷமா கொண்டாடுறது அவன் குடும்பம்தான். ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் அத கொண்டாடுறது அவனால உருவாக்கப்பட்ட குடும்பம். அப்படி உன்னால உருவாக்கப்பட்ட குடும்பத்தோட ஒரு ஆளாதான் உன் பிறந்தநாள நா கொண்டாடுறேன்.
Images are subject to © copyright to their respective owners.
நம்ம வாழ்க்கைல நாம நிறைய பேர நேசிப்போம். அவங்க நம்மல நேசிக்கனும்னு அவசியம் இல்ல.அவங்க நம்ம மேல மரியாதையாவும் அன்பாவும் இருப்பாங்க. ஆனா நாம பல பேர நேசிக்க மறந்துருப்போம். அவங்க நம்மல அளவுக்கு அதிகமா நேசிக்குறவங்களா இருப்பாங்க. அப்படி ஒன்னு என் கண்ணுல தென்பட்டப்பதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னே தோனுச்சு.
மகாலக்ஷ்மி.. காலைல இருந்து ஒரே யோசனை. உன் பிறந்தநாளுக்கு என்ன செய்றதுனு. 12 மணிக்கு கேக் வெட்றது ஸ்வீட் குடுக்குறது முதியோர் இல்லம் அனாதை இல்லன்னு போய் சாப்பாடு போடுறது பிடிச்ச giftவாங்கி குடுக்குறது இப்டி எல்லாமே எப்பையுமே உனக்கு எல்லாரும் பண்றதுதான். ஆனா எனக்கு உன்ன பிடிக்கும்.
அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு. அப்படி ஒரு விஷயம்தான் இந்த 'மல்லிகை பூ'. நாம நம்ம தேவைக்கு எத வேணாலும் வாங்கிக்க முடியும்ற போது இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான். இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்ல என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமில்ல. என்னப் பொருத்தவர இந்த பூ மிகப்பெரிய ஒரு gift உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு. மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான இந்த பூ வில் அதிகமா இருக்கு. So my humble gift வாங்கிக்கோ. இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு குடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கைலயே முதன்முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற gift. அது உனக்குதான். I love you mahalakshmi" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் போஸ் கொடுத்த பிரபல நடிகர்.. அந்த கேப்ஷன் தான் செம்ம..!