சென்னை: தமிழ் சினிமாவின் தற்போதைய சூழல் குறித்து தயாரிப்பாளர், வினியோகஸ்தர், நடிகர் ஆர்.கே சுரேஷ் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
Also Read | வாவ்.. CAREER-லயே பெரிய விலைக்கு, KVRK பட OVERSEAS உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்!
பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தற்போது மலையாள படமான ஜோசப் படத்தின் ரீமேக்கான விசித்திரன் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கோலிவுட்டில் இவர் இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படம் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.பத்மகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை தனது B ஸ்டுடியோஸ் பேனரில் இயக்குநர் பாலா தயாரிக்கிறார்.
நடிகர் சுரேஷ் இந்தப் படத்தில் ஒரு முன்னாள் போலிசாக நடிக்கிறார். இந்த படத்தில் சுரேஷ் உடன் பூர்ணா மற்றும் மது ஷாலினி ஆகியோர் முன்னணி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன், சிம்பு-ஹன்சிகா நடித்த மகா ஆகிய படங்களின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றி உள்ளார்.
இந்நிலையில், நமது BEHINDWOODS சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் சினிமா வர்த்தகம் தொடர்பான பல தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அதில், KGF சாப்டர் 2 படம் 10 நாளில் 1000 கோடியை தொடலாம் என்றும், RRR படத்தின் வசூலை எட்டும் என்றும் கூறியுள்ளார். விஜய் படம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் என்றும், இருப்பினும் KGF-2 படத்திற்கு காட்சிகள் அதிகரிப்பதும் உண்மை என்றும் கூறியுள்ளார். மேலும் நடிகர்களின் சம்பளம், முன்னணி நடிகர்களின் வியாபர எல்லை ஆகியவற்றை பற்றியும் பேசியுள்ளார்.
குறிப்பாக இப்போதைய சூழலில் 2007 ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில், விஷ்னுவர்தன் இயக்கத்தில் வெளியான பில்லா படத்தை இப்போது எடுத்தால் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு மட்டும் செலவாகும் என்று கூறியுள்ளார் மேலும் வலிமை படம் 65 கோடி ரூபாய் ஷேர் கொடுத்ததாகவும், பீஸ்ட் படம் 60 முதல் 65 கோடி ரூபாய் வரை ஷேர் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8