COFFEE WITH KADHAL படக்குழுவினர் 200 பேரின் குடும்பத்துக்கும்.. தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் 'காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | வாரிசு படத்தின் ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? ரசிகர்களை சந்தித்த விஜய்! வைரல் வீடியோ

இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விழாவில் தயாரிப்பாளரும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் பேசும்போது, “நானும் சுந்தர்.சியும் ரிஷி பட சமயத்தில் முதன்முதலாக விமானத்தில்தான் சந்தித்தோம். அப்போது இருந்து நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. அரண்மனை-3 படத்தை அவரை நம்பி ஒப்படைத்தேன். நல்ல லாபம் கிடைத்தது. இப்போது இரண்டாவது முறையாக காபி வித் காதல் படத்தையும் சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்து நாங்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படம் மிகப்பெரிய படமாக இருக்கும். இந்த படத்தில் ரம்பம்பம் பாடலில் குஷ்புவும் ஆடியிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.

இந்த இடத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இந்த படத்தில் பணியாற்றியுள்ள 200 தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரும் விதமாக அனைவருக்குமே இலவச சிகிச்சை கார்டு வழங்க இருக்கிறேன். சாதாரண சிகிச்சை முதல், அறுவை சிகிச்சை வரை இந்த 200 பேரின் குடும்பத்துக்குமே இலவசம்தான்.

அதேபோல என்னுடைய கல்லூரியில் படித்துள்ள 4000 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இயக்குனர் சுந்தர்.சி யின் பன்முகத்தன்மை கொண்ட உழைப்பையும் பணியையும் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறோம்” என்று கூறினார்.

Also Read | போடு.! பிரபல தமிழ் TV சேனலில் ஒளிபரப்பாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'... எப்போ? எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Producer medical offer for Coffee With Kadhal movie workers family

People looking for online information on Coffee with kadhal, Sundar C will find this news story useful.