சிம்பு வெயிட் குறைச்ச சீக்ரட்ஸ்.. ''அடுத்து பெரிய ட்ரீட் இருக்கு'' - EXCLUSIVE INTERVIEW.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் புதிய லுக் குறித்து தயாரிப்பாளர் மதியழகன் பிரத்யேக நேர்கானல் கொடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநாடு ஷூட்டிங், விரைவில் தொடங்கவுள்ளது. இதனிடையே தற்போது சிம்பு அவரது சொந்த தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று சமூக வலைதளங்களில் களமிறங்கிய சிம்பு, புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள், ட்ரெண்ட் அடித்து கொண்டாடினார்கள். இந்த நிலையில் தற்போது சிம்பு, ஹன்சிகா நடிப்பில் மகா திரைப்படத்தை தயாரித்துள்ள மதியழகன், சிம்புவின் வெயிட் குறைப்பு சீக்ரட்ஸ் குறித்து மனம் திறந்து பேசினார். 

சிம்பு இந்த எடை குறைப்புக்காக, வேலை, தூக்கம் என நேரங்களை கடைப்பிடித்து மிகவும் சரியான ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறாராம். மேலும் இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தயாரிப்பாளர் மதியழகன் பேசிய முழு வீடியோவின் தொகுப்பு இதோ. 

சிம்பு வெயிட் குறைச்ச சீக்ரட்ஸ்.. ''அடுத்து பெரிய ட்ரீட் இருக்கு'' - EXCLUSIVE INTERVIEW. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிம்புவின் லேட்டஸ்ட் லுக் பற்றி மதியழகன் | Producer Madhiyalagan opens on simbu recent transformation

People looking for online information on Simbu, Str, Suseenthiran will find this news story useful.