பிரபல ஹிந்திப் படத் தயாரிப்பாளரான கரீம் மொரானிக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. ஷாரூக் கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ஷாரூக் கான், கரீனா கபூர் நடித்த ரா ஒன் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கரீம்.
![Producer Karim Morani tests positive for corona virus Producer Karim Morani tests positive for corona virus](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/producer-karim-morani-tests-positive-for-corona-virus-new-home-mob-index-1.jpg)
சமீபத்தில் கரீம் மொரானியின் மகள்கள் ஷாசா மற்றும் சோவா ஆகிய இருவருக்கும் கரோனா வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்ததால், இருவரும் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
தற்போது கரீமுக்கும் அவரது மனைவிக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவரது மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை ஆனால் கமீமுக்கு இவ்வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் வீட்டில் தங்கியிருந்த மற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனையில் உள்ளனர்.
கரீம் மொரானி குடும்பம் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.