மற்றுமொரு சோகம்.! பிரபல ரஜினி, கமல் படங்கள் & ‘சுயம்வரம்’ பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மை காலமாக திரைத்துறையில் பழம்பெரும் நடிகர் & இயக்குநர் கே.விஸ்வநாத், பரியேறும் பெருமாள் நடிகர் நெல்லை தங்கராஜ், இயக்குநர் டி.பி.கஜேந்திரன், பாடகி வாணி ஜெயராம் என அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் மீளா சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சோஹேல் என்ன இப்டி தான் கூப்பிடுவாரு".. ஹன்சிகா சொன்ன Nick Name ரகசியம்!!.. Exclusive!!

இந்நிலையில் மற்றுமொரு பேரிழப்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி (76) காலமானார். சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காளி மற்றும் கர்ஜனை படங்களை தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி. 

அதுமட்டுமல்லாமல், 24 மணி நேரத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட "சுயம்வரம்" திரைப்படத்தை தயாரித்தவரும் இவர்தான். இவர் கிரிதாரிலால் நாக்பால் என்றழைக்கப்படுபவர். இவரது இயற்பெயர் தாப் ஹேம் நாக் பாபுஜி. தற்போது 76 வயது நிரம்பிய இன்று (7.2.2023) காலை காலமானார்.

இவரது இறுதிச் சடங்கு, சென்னை கீழ்ப்பாக்கத்ம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள Pleasant Appartments நடக்கிறது. இவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | விஜய்க்கு அடுத்த கதை ரெடி பண்ணிய ஜில்லா இயக்குனர்.! கதை கேட்டு மெர்சலான பிரபல இயக்குனர்...

தொடர்புடைய இணைப்புகள்

Producer Hem Nag Babuji passed away ஹேம் நாக் பாபுஜி

People looking for online information on ஹேம் நாக் பாபுஜி, Hem Nag Babuji, Kaali, Rajini will find this news story useful.