'காற்றின் மொழி', 'மிஸ்டர் சந்திரமௌலி' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது பாஃப்டா நிறுவனம். மேலும் எண்ணற்ற படங்களை விநியோகம் செய்துள்ளது. இந்நிலையில் பாஃப்டா மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், முன்னணி கதாநாயகனின் நடிப்பில், தமிழில் தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் தயாரிக்கும் திட்டத்துடன் சிறந்த கதைகளுக்காக காத்திருக்கிறோம்.
திரைக்கதை மட்டும் எழுதவோ அல்லது திரைக்கதையுடன் படத்தை இயக்கவும் நீங்கள் எங்களை அணுகலாம். உங்கள் திரைக்கதை சுருக்கம் சுவாரஸியமாகவும், புதுமையாகவும், வெகுஜன ரசனைக்குரியதாகவும் இருந்தால் முழுக்கதையை விவரிக்க அனுபவம் வாய்ந்த எங்கள் திரைக்கதை குழு உங்களை அழைக்கும்.
முழுத்திரைக்கதையும் நீங்கள் அனுப்ப வேண்டாம். தெளிவான முழுமையான கதைச் சுருக்கம் மட்டும் போதும். உங்களிடம் சிறந்த திரைக்கதை இருப்பின் boftamwi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களை பற்றிய சிறிய அறிமுகம், மற்றும் தொடர்பு எண் போன்ற விவரங்களுடன் மே - 18 ஆம் தேதிக்குள் அனுப்பவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஃப்டா நிறுவனர் ஜி.தனஞ்செயனிடம் விசாரித்த போது, எங்களிடம் நிறைய பேர் தங்களது கதைகளை சொல்ல அணுகினர். அவர்கள் அனைவரையும் சந்தித்து கதைகள் கேட்பது என்பது இயலாத காரியம். அதனால் இந்த வாய்ப்பை வழங்க முடிவு செய்தோம் என்றார்.