நடிகர் விக்ரமின் மகன் துருவ் பாலாவின் இயக்கத்தில் 'அர்ஜூன் ரெட்டி' தமிழ் ரீமேக்கான வர்மா படத்தின் மூலம் அறிமுகமாவதாக அறிவிக்கப்பட்டு படமும் முழுமையாக முடிவடைந்தது. இதனையடுத்து தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட மாற்றுக்கருத்து காரணமாக படம் கைவிடப்பட்டது.
பின்பு 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் மீண்டும் கிரீசாயா இயக்கத்தில் முற்றிலும் புது டீமுடன் உருவான இந்த படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து விக்ரம் மற்றும் துருவ் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.
விக்ரமின் 60வது படம் என்பதால் அந்த படத்தின் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' வருகிற நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் பரவியது. இதனையடுத்து அந்த படத் தயாரிப்பாளர் அது பொய்யான தகவல் என்று மறுத்துள்ளார்.